தமிழகத்திற்கு அடித்த பம்பர் பரிசு... நாட்டின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்...

தமிழகத்தில் தனது மாபெரும் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக ஆம்பியர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியில் இந்த ஆலை அமைகிறது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம், விரைவில் இந்தியாவில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதுவும், உள்நாட்டிலேயே தனது கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

ஆகையால், இந்நிறுவனத்திற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்கள், தங்களின் மாநிலத்தில் தொழிற்சாலையை அமைக்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றன. அந்தவகையில், கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகமும் போட்டி செய்து வருகிறது. இதனடிப்படையில் அண்மையில் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ அழைப்பையும் டெஸ்லாவிற்கு தமிழக அரசு விடுத்திருந்தது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

இதுமட்டுமின்றி, முன்னதாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கான விதையை நேரடியாகவே டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-விடமே வித்திட்டிருந்தார். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டும் துரதிர்ஷ்டவசமாக இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் கையைவிட்டு நழுவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலை தங்களது மாநிலத்திலேயே அமைய இருப்பதாக கர்நாடக மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மிக சமீபத்தில் அறிவித்தார். ஆகையால், இந்நிறுவனம் தமிழக வருகை சந்தேகமாகியுள்ளது. அதேசமயம், இந்நிறுவனம் தமிழகத்தைவிட்டு நழுவிச் சென்றிருந்தாலும் பிற மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளன.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

அந்தவகையில், பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா தனது மாபெரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தமிழகத்தில் தனது உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனமே தமிழகத்தில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டில் மின்வாகன உற்பத்தியை உருவாக்க அனுமதியைப் பெற்றிருக்கின்றது. இதன் உற்பத்தி ஆலை ராணிபேட் பகுதியில் அமைய இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

இதற்கான ஒப்பந்தம் மிக சமீபத்திலேயே கையெழுத்தாகியிருக்கின்றது. மேலும், 1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான நிலம் உற்பத்தி ஆலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நிலத்தில் உற்பத்தி ஆலை உருவாக்கம் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த ஆலை நடப்பாண்டிற்கு உள்ளாக வாகன தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவிடும் என கூறப்படுகின்றது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

அந்தளவிற்கு மிக வேகமான கட்டுமானப் பணிகளை ஆம்பியர் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இங்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சம் யூனிட்டுகள் என தனது மின் வாகனங்களை நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த எண்ணிக்கையில் மின் வாகனங்களை நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது. பின்னர், இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 1 மில்லியன் என உயர்த்த ஆம்பியர் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

இதற்கான பணிகளிலேயே நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில், சுமார் 250 கோடி ரூபாயை ஏற்கனவே நிறுவனம் வெளியேற்றியிருக்கின்றது. இந்த உற்பத்தி ஆலை நாட்டின் மிக பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையாக உருவாகி வருகின்றது.

தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்... நாட்டின் மிகப்பெரிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்கிறது ஆம்பியர்... எங்கு தெரியுமா?

இங்கு நவீன கருவிகளைக் கொண்டு தாங்கள் மின் வாகனங்களை உருவாக்க இருக்கின்றோம் என ஆம்பியர் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கிரீவ்ஸ் காட்டன் அறிவித்திருக்கின்றது. மேலும், இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர மின்சார வாகனங்களையும் நிறுவனம் இந்த ஆலையில் உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Ampere Electric To Set-Up Country's Largest EV Manufacturing Plant In TamilNadu. Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X