நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

ஆம்பியர் (Ampere) நிறுவனம் அதன் மேக்னஸ் இஎக்ஸ் (Magnus EX) எனும் குறைந்த விலை, அதிக ரேஞ்ஜ் இ-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் (Ampere), அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மேக்னஸ் மின்சார ஸ்கூட்டர் மாடலின்கீழே புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மேக்னஸ் இஎக்ஸ் (Magnus EX) எனும் புதிய தேர்வையே ஆம்பியர் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

இந்த தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 68,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பண்டிகைக் கால சலுகை மற்றும் மாநில அரசின் மானிய திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த இ-ஸ்கூட்டர் இன்னும் கவர்ச்சிகரமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

ஆம்பியர் நிறுவனம், இப்புதிய மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையான சார்ஜில் 121 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என தெரிவித்துள்ளது. ஆம், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 121 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். இது தினசரி வாகன பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

"அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதனால், தினசரி வாகன பயன்பாட்டாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் தங்களின் பணத்தை பாதுகாக்க புதிய மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உதவும்" என நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் ராய் குரியன் கூறியுள்ளார்.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

மேக்னஸ் இஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் மிகவும் இலகு ரக எடை மற்றும் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியே பயன்படுத்தப்பட்டி இருக்கின்றது. இப்பேட்டரியை சுலபமாக சார்ஜ் செய்ய ஏதுவாக 5 ஆம்ப் சாக்கெட் வசதியை நிறுவனம் வீட்டிலேயே ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

ஆகையைல், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். அதேவேலையில், இப்பேட்டரியை அலுவலகம் அல்லது வேறு எந்த இடங்களில் வைத்து வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிரத்யேக வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

மேலும், வெறும் நகர பயன்பாட்டிற்கு மட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தினால் மூன்று நாட்கள் வரை சார்ஜ் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 30 கிமீ முதல் 40 கிமீ தூரம் வீதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதிலும், மிகவும் குறைவான வேகத்தில் வாகனத்தை இயக்குபவர்களால் இன்னும் கூடுதல் ரேஞ்ஜை பெறவும் முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,200 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் இரு விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டுள்ளன. சூப்பர் சேவர் ஈகோ மோட் மற்றும் பெப்பியர் பவர் மோட் ஆகிய இரு மோட்களே வழங்கப்பட்டுள்ளன. இதில் ஈகோ மோட் என்பது அதிக ரேஞ்ஜையும், குறைந்த வேகத்தையும் வழங்கக் கூடியது.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

பெப்பியர் பவர் மோட் என்பது மிக அதிக வேகத்தில் வாகனத்தை இயக்க உதவும். ஆகையால், இதில் ரேஞ்ஜ் சற்று குறைவாகவே கிடைக்கும். இதன் காரணத்தினால்தான் குறைந்த வேகத்தில் வைத்து இயக்க நிறுவனம் அறிவுறுத்துகின்றது. அவ்வாறு இயக்கும்பட்சத்தில் பலவித பலன்களை பெற முடியுமாம்.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. மக்கள் மத்தியில் மின் வாகனத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அதிகப்படுத்துதல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட தூரம் பயணிக்கும் Ampere Magnus EX இ-ஸ்கூட்டர் அறிமுகம்... Ola மின்சார ஸ்கூட்டரை விட குறைவான விலையில்!

இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய மேக்னஸ் இஎக்ஸ்-இன் வருகை அமைந்துள்ளது. இது மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Ampere launches e scooter magnus ex in india at rs 68999
Story first published: Thursday, October 14, 2021, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X