புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

அப்ரில்லா (Aprilia) நிறுவனம் இரு புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய ஸ்கூட்டர்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அப்ரில்லா (Aprilia), இந்தியாவில் தான் விற்பனைச் செய்து வரும் தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் இரண்டு புதிய இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

இதன் வாயிலாக தனது ஆதிக்கத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையில் புதிய தயாரிப்புகளை நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. எஸ்ஆர் 125 (Aprilia SR 125) மற்றும் எஸ்ஆர் 160 (Aprilia SR 160) ஆகிய இரு இருசக்கர வாகனங்களையே நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

அறிமுக விலையாக ரூ. 1,07,595 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை மாடலின் விலை ஆகும். அதாவது, எஸ்ஆர் 125 மாடலின் விலை ஆகும். எஸ்ஆர் 160 மாடலுக்கு ரூ. 1,17,494 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

இதில், எஸ்ஆர் 125 ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். அதே நேரத்தில் எஸ்ஆர் 160 ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஸ்டாண்டர்டு, கார்பன் மற்றும் ரேஸ் ஆகிய தேர்வுகளில் அது கிடைக்கும்.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

அப்ரில்லா நிறுவனம் எஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் 124.45 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9.78 பிஎச்பி பவரை 7,700 ஆர்பிஎம்மிலும், 9.70 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

தொடர்ந்து, எஸ்ஆர் 160 மாடலில் 160.03 சிசி திறனை வெளியற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 10.86 பிஎச்பி பவரை 7,600 ஆர்பிஎம்மிலும், 11.6 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

இரு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் அமைப்புகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் சிங்கிள் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

இத்துடன், சிறந்த பாதுகாப்பான பிரேக்கிங் வசதியை வழங்கும் பொருட்டு எஸ்ஆர் 125 மாடலில் சிபிஎஸ் (combined braking system) வசதியும், எஸ்ஆர் 160 மாடலில் ஒற்றை சேனல் ஏபிஎஸ் (antilock braking system) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாடல்களிலும் 14 இன்ச் அலாய் வீல்கள் இரு முனைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

அப்ரில்லா நிறுவனம் இந்த புதுமுக ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்கை ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. கடந்த நவம்பர் 9ம் தேதி அன்று முதல் இருசக்கர வாகனத்திற்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. அப்ரில்லா நிறுவனம் எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் பன்முக அப்டேட்டுகளை வழங்கியிருக்கின்றது.

புதிதாக 2 Aprilia ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சிக்கணுமா? இதோ முழு விபரம்!

இதன்படி, முன் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஹெட்லேம்ப் மற்றும் அப்ரான்கள் ஆகியவை புதிய அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு மாற்றங்கள் எஸ்ஆர் 160-இல் இடம் பெற்றிருக்கின்றது. இதனை தற்போது வெளியாகிய ஸ்கூட்டர் பற்றிய படங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2016ம் ஆண்டில் இருந்து ஒரே தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் காட்சியளித்து வந்த தற்போது புதிய தோற்றத்திற்கு அது அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது.

குறிப்பு: சில படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia launched sr 125 and sr 160 scooters in india
Story first published: Tuesday, November 16, 2021, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X