ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஏப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஏப்ரிலியா நிறுவனத்தின் ஆர்எஸ்660 பைக் ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், டூவோனோ 660 மாடலானது நேக்கட் எனப்படும் ஃபேரிங் பேனல்கள் இல்லாமல் திறந்த மேனியாக உடல்பகுதியை காட்டும் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு பைக் மாடல்களும் இந்தியர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே ஆவலை தூண்டி வருகின்றன.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

இந்த நிலையில், இந்த இரண்டு பைக்குகளும் விரைவில் இந்தியாவில் வருவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. மேலும், இரண்டு பைக் மாடல்களுக்கும் இப்போது முன்பதிவும் ஏற்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஏப்ரிலியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான பியாஜியோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் டிகோ க்ராஃபி இதனை உறுதி செய்துள்ளார்.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,"ஏப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டூவோனோ 660 ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இந்தியாவில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை அறியும் விதத்தில், அனைத்து டீலர்களிலும் புக்கிங் துவங்கி இருக்கிறோம். இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டு காலத்தில் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டி இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முனைப்பில் உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஏப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டூவோனோ 660 பைக் மாடல்களில் யூரோ-5 (பிஎஸ்-6) மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 659சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏப்ரிலியாவின் பிரபலமான ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக்கின் வி4 எஞ்சினிலிருந்து திறன் குறைக்கப்பட்ட எஞ்சினாக இது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

ஆர்எஸ்660 பைக்கில் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், டூவோனோ 660 பைக்கில் இந்த எஞ்சின் 95 எச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கம்யூட், டைனமிக், இன்டிவிஜூவல், சேலஞ்ச் மற்றும் டைம் அட்டாக் ஆகிய ரைடிங் மோடுகளுடன் உள்ளது.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

இரண்டு பைக்குகளிலுமே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அப்-டவுன் குயிக்ஷிஃப்டர் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், அட்ஜெஸ்ட்டபிள் வீலி கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், ஏப்ரிலியாவின் பிரத்யேக பெர்ஃபார்மென்ஸ் ரைட் கன்ட்ரோல் ஆகிய பல தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ளன.

ஏப்ரிலியா ஆர்எஸ்660, டூவோனோ 660 பைக்குகளுக்கு இந்தியாவில் புக்கிங் ஆரம்பம்

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதால், போட்டியாளர்களைவிட மிக அதிக விலை கொண்ட மாடல்களாக இவை இருக்கும். ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் ரூ.14 லட்சத்திலும், டூவோனோ 660 பைக் ரூ.10 லட்சத்திலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Aprilia has started the pre-bookings for new RS 660 And Tuono 660 bike models in India.
Story first published: Thursday, February 25, 2021, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X