அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்படி நம் நாட்டில் முதல் ஆளாக ஆர்எஸ்660 பைக்கை பெண் ஒருவர் டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

அப்ரில்லா நிறுவனம் டுவோனோ 660 மோட்டார்சைக்கிள் உடன் ஆர்எஸ்660 பைக்கை இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுதியது. இதில் டுவோனோ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.09 லட்சமாகவும், ஆர்எஸ்660 பைக்கின் விலை ரூ.13.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

இந்த இரு மோட்டார்சைக்கிள்களினால் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. மற்ற இரு அப்ரில்லா பைக்குகளாக விற்பனையில் உள்ள டுவோனோ வி4 மற்றும் ஆர்எஸ்வி4 என்ற அப்ரில்லாவின் பிரதான வி4 மாடல்களின் விலைகள் ரூ.20.66 லட்சம் மற்றும் ரூ.23.69 லட்சம் என உள்ளன.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

இவற்றுடன் புதிய 125சிசி மற்றும் 160சிசி ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அப்ரில்லா நிறுவனம் தயாராகி வருகிறது. சரி விஷயத்திற்குள் வருவோம். அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கின் டெலிவிரி பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சூப்பர்பைக்கை அலிஷா அப்துல்லா என்ற பெண் இந்தியாவிலேயே முதல் ஆளாக டெலிவிரி பெற்றுள்ளார்.

இதனை அவர் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவை தான் மேலே காண்கிறீர்கள். பைக்கின் தோற்றம் மட்டுமல்ல, ஆற்றலும் சிறப்பாக உள்ளதாக இவர் தனது பதிவில் கூறியுள்ளார். அலிஷா அப்துல்லா, தேசிய அளவிலான தொழிற்முறை பைக் ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

பந்தய களத்திற்கு ஏற்ற பைக்குகளுள் ஒன்றாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அப்ரில்லா ஆர்எஸ்660 அதன் ஹெட்லேம்ப் வெளிச்சத்தினால் சாலையில் செல்லும் எவர் ஒருவரையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும். கூர்மையான லைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ரில்லா சூப்பர்பைக், முழுக்க முழுக்க காற்றியக்கவியல் பண்பிற்கு இணக்கமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

இதன் முன்பக்கத்தில் இரட்டை-பீம் எல்இடி ஹெட்லைட் மற்றும் நேர்த்தியான வடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்ரில்லா பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக பெரிய அளவிலான விண்ட்ஷீல்டு, அகலமான ஹேண்டில்பார், செதுக்கப்பட்டது போன்றதான வடிவில் பெட்ரோல் டேங்க், அளவில் சிறிய எக்ஸாஸ்ட் குழாய், வண்ண நிறத்தில் சக்கரங்கள் மற்றும் நறுக்கப்பட்ட பின்பகுதி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

மொத்தம் மூன்று விதமான பெயிண்ட் தேர்வுகளில் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை வாங்க முடியும். ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் லாவா சிவப்பு நிறத்தேர்வையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இந்த பெயிண்ட்டில் தான் அப்ரில்லா நிறுவனமும் அதிகமாக ஆர்எஸ்660 பைக்கை இந்தியாவில் விளம்பரம் செய்தது. அலிஷா அப்துல்லா ஆர்எஸ்660 பைக்கை வாங்கியிருப்பதும் இந்த நிறத்தில் தான்.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

இந்த லாவா சிவப்பு நிறத்தில் அடர் நீலம் மற்றும் பளிச்சிடும் சிவப்பு நிறங்கள் வழங்கப்படுகின்றன. இந்த அப்ரில்லா பைக்கிற்கான மற்ற இரு பெயிண்ட் தேர்வுகளாக அபெக்ஸ் கருப்பு மற்றும் ஆசிட் கோல்டு (மஞ்சள்& பச்சை) உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த மூன்று நிறத்தேர்வுகளிலும் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் வழங்கப்படுகிறது.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

அப்ரில்லா ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ 660 என்ற இரு பைக்கிலும் 659சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 100 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!

பந்தய சூழலுக்காக ஆர்எஸ்660 பைக்கில் அப்ரில்லா செயல்திறன் ரைடு கண்ட்ரோல் (APRC) சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த சிஸ்டம் ஆனது வெவ்வேறான எலக்ட்ரானிக் பாகங்கள், முடுக்க சென்சார்கள் மற்றும் கைரோஸ்கோப்புகள் மூலம் செயல்படுகிறது. ஆர்எஸ்660 பைக்கிற்கான APRC தொகுப்பில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எதிர் முடுக்கத்தின் போது என்ஜின் ப்ரேக், என்ஜின் வரைப்படம் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia RS660 Deliveries Started in India. Woman Racer Taken First Delivery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X