Just In
- 1 hr ago சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
- 6 hrs ago ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
- 7 hrs ago குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
- 7 hrs ago இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
Don't Miss!
- Finance ஓசூர்-க்கு போட்டியாக சென்னை.. மாம்பாக்கம் சிப்காட்-ல் மாஸ் சம்பவம்.. இனி கையில புடிக்க முடியாது..!!
- Lifestyle Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- News கவலைக்கிடம்.. தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி உடல்நிலை எப்படி இருக்கு? அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை முதல் ஆளாக டெலிவிரி எடுத்த பெண்!! ஆற்றல் சிறப்பானதாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு!
சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்படி நம் நாட்டில் முதல் ஆளாக ஆர்எஸ்660 பைக்கை பெண் ஒருவர் டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
அப்ரில்லா நிறுவனம் டுவோனோ 660 மோட்டார்சைக்கிள் உடன் ஆர்எஸ்660 பைக்கை இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுதியது. இதில் டுவோனோ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.09 லட்சமாகவும், ஆர்எஸ்660 பைக்கின் விலை ரூ.13.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மோட்டார்சைக்கிள்களினால் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அப்ரில்லா மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. மற்ற இரு அப்ரில்லா பைக்குகளாக விற்பனையில் உள்ள டுவோனோ வி4 மற்றும் ஆர்எஸ்வி4 என்ற அப்ரில்லாவின் பிரதான வி4 மாடல்களின் விலைகள் ரூ.20.66 லட்சம் மற்றும் ரூ.23.69 லட்சம் என உள்ளன.
இவற்றுடன் புதிய 125சிசி மற்றும் 160சிசி ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த அப்ரில்லா நிறுவனம் தயாராகி வருகிறது. சரி விஷயத்திற்குள் வருவோம். அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கின் டெலிவிரி பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சூப்பர்பைக்கை அலிஷா அப்துல்லா என்ற பெண் இந்தியாவிலேயே முதல் ஆளாக டெலிவிரி பெற்றுள்ளார்.
இதனை அவர் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவை தான் மேலே காண்கிறீர்கள். பைக்கின் தோற்றம் மட்டுமல்ல, ஆற்றலும் சிறப்பாக உள்ளதாக இவர் தனது பதிவில் கூறியுள்ளார். அலிஷா அப்துல்லா, தேசிய அளவிலான தொழிற்முறை பைக் ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தய களத்திற்கு ஏற்ற பைக்குகளுள் ஒன்றாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அப்ரில்லா ஆர்எஸ்660 அதன் ஹெட்லேம்ப் வெளிச்சத்தினால் சாலையில் செல்லும் எவர் ஒருவரையும் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும். கூர்மையான லைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ரில்லா சூப்பர்பைக், முழுக்க முழுக்க காற்றியக்கவியல் பண்பிற்கு இணக்கமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முன்பக்கத்தில் இரட்டை-பீம் எல்இடி ஹெட்லைட் மற்றும் நேர்த்தியான வடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்ரில்லா பைக்கின் மற்ற சிறப்பம்சங்களாக பெரிய அளவிலான விண்ட்ஷீல்டு, அகலமான ஹேண்டில்பார், செதுக்கப்பட்டது போன்றதான வடிவில் பெட்ரோல் டேங்க், அளவில் சிறிய எக்ஸாஸ்ட் குழாய், வண்ண நிறத்தில் சக்கரங்கள் மற்றும் நறுக்கப்பட்ட பின்பகுதி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
மொத்தம் மூன்று விதமான பெயிண்ட் தேர்வுகளில் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்கை வாங்க முடியும். ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் லாவா சிவப்பு நிறத்தேர்வையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இந்த பெயிண்ட்டில் தான் அப்ரில்லா நிறுவனமும் அதிகமாக ஆர்எஸ்660 பைக்கை இந்தியாவில் விளம்பரம் செய்தது. அலிஷா அப்துல்லா ஆர்எஸ்660 பைக்கை வாங்கியிருப்பதும் இந்த நிறத்தில் தான்.
இந்த லாவா சிவப்பு நிறத்தில் அடர் நீலம் மற்றும் பளிச்சிடும் சிவப்பு நிறங்கள் வழங்கப்படுகின்றன. இந்த அப்ரில்லா பைக்கிற்கான மற்ற இரு பெயிண்ட் தேர்வுகளாக அபெக்ஸ் கருப்பு மற்றும் ஆசிட் கோல்டு (மஞ்சள்& பச்சை) உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த மூன்று நிறத்தேர்வுகளிலும் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் தங்க நிறத்தில் வழங்கப்படுகிறது.
அப்ரில்லா ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ 660 என்ற இரு பைக்கிலும் 659சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 100 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
பந்தய சூழலுக்காக ஆர்எஸ்660 பைக்கில் அப்ரில்லா செயல்திறன் ரைடு கண்ட்ரோல் (APRC) சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த சிஸ்டம் ஆனது வெவ்வேறான எலக்ட்ரானிக் பாகங்கள், முடுக்க சென்சார்கள் மற்றும் கைரோஸ்கோப்புகள் மூலம் செயல்படுகிறது. ஆர்எஸ்660 பைக்கிற்கான APRC தொகுப்பில் டிராக்ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எதிர் முடுக்கத்தின் போது என்ஜின் ப்ரேக், என்ஜின் வரைப்படம் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.
-
நம்ப வைத்து ஏமாத்தும் உலகம்... அதுக்கு இந்த காரே சாட்சி.. இத நீங்க பென்ஸ் காருனு நினைச்சா அதுதான் கிடையாது..
-
118மீ நீளமுள்ள சொகுசு படகை வாங்கிய ஃபேஸ்புக் ஓனர்.. இது கப்பலா இல்ல மிதக்கும் அரண்மனையா! வீடே தேவைப்படாது போல!
-
ஓலா எல்லாம் ஓரமா போ! கம்மி ரேட்ல பஜாஜ் சேத்தக் எலெக்டரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!