யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இளைஞர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் அப்ரில்லா எஸ்ஆர் 160 (Aprilia SR 160) ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் அப்ரில்லா எஸ்ஆர் 160 (Aprilia SR 160) மாடலும் ஒன்று. இந்த ஸ்கூட்டர் நிறுவனம் எப்போது அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இந்த நிலையிலேயே மிக விரைவில் எஸ்ஆர்160 ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 16ம் தேதி அன்றே அப்ரில்லா எஸ்ஆர் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் மிக விரைவில் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

பன்முக புதுப்பித்தல்கள் உடன் அப்ரில்லா எஸ்ஆர் 160 விற்பனைக்கு வர இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட முன் பக்கம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் அப்ரான்கள் உடன் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு மாற்றங்கள் எஸ்ஆர் 160-இல் இடம் பெற இருக்கின்றது. இதனை முன்னதாக வெளியாகிய ஸ்கூட்டர் பற்றிய ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

புதிய அப்டேட்டினால் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து ஒரே தோற்றத்தில் காட்சியளித்து வந்த அப்ரில்லா எஸ்ஆர் 160 தற்போது புதிய தோற்றத்திற்கு அப்கிரேட் ஆகியிருக்கின்றது. லேசான வளைவான தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப் (முன்பை விட கூடுதல் ஷார்ப்பான தோற்றம்), முழு எல்இடி மின் விளக்கு ஆகியவற்றால் இது அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இதேபோல் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹேண்டில்பார், இரட்டை துண்டு அமைப்பு உடைய இருக்கை (முன்னதாக ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை பயன்படுத்தப்பட்டது), புதிய பிடிமான கம்பிகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், கவர்ச்சியான தோற்றத்திற்கு சற்றும் குறைவில்லாத இருசக்கர வாகனமாக எஸ்ஆர்160 காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் அண்மயைில் எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டன. மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி புதிய எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

தற்போது அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மற்றும் வெஸ்பா பிற மாடல்களில் இதே திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. முந்தைய எஸ்ஆர் 160 மாடலில் அனலாக் க்ளஸ்டரே வழங்கப்பட்டது. இதனை மாற்றி நவீன யுகத்திற்கு ஏற்ற வாகனமாக எஸ்ஆர்160 மாடலை மாற்றும் வகையில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டிருக்கின்றது.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

புதிய எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் 160 சிசி திறன் கொண்ட ஏர்-கூல்டு, 3 வால்வுகள் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 10.84 பிஎச்பியையும், 11.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த திறன் ஸ்கூட்டரை ஓர் ஸ்போர்ட்டி ரக ஸ்கூட்டரைப் போன்று தென்பட செய்யும்.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

இதற்கேற்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் ஆகிய சஸ்பென்ஷன்கள் இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டிஸ்க் பிரேக் வசதி உடன் வழங்கப்பட இருக்கின்றது. இது மிக சிறந்த பிரேக்கிங்கை உறுதிப்படுத்த உதவும்.

யப்பா இப்போவாது சொன்னாங்களே! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Aprilia SR160 ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியீடு!

தற்போது விற்பனையில் இருக்கும் எஸ்ஆர் 160 ரூ. 1.08 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையில் புதிய எஸ்ஆர்160 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia sr 160 launch date unveiled here is full details
Story first published: Saturday, November 13, 2021, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X