மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அப்ரில்லா டுவானோ 660 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அப்ரில்லா டுவானோ 660 (Aprilia Tuono 660) பைக் இந்தியாவில் இன்று (செப்டம்பர் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 13.09 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த செமி-ஃபேர்டு (Semi-faired) பைக், சிபியூ (CBU - Completely Built-Up Unit) வழியில் இந்திய சந்தைக்கு வருகிறது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அதாவது முழுவதும் உருவாக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு இந்த பைக் விற்பனை செய்யப்படும். மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில், அப்ரில்லா டுவானோ 660 பைக் கிடைக்கும். அப்ரில்லா டுவானோ 660 பைக்கிற்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. இந்த பைக் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

கான்செப்ட் பிளாக், இரிடியம் க்ரே மற்றும் ஆசிட் கோல்டு என மொத்தம் மூன்று வண்ணங்களில் அப்ரில்லா டுவானோ 660 பைக் கிடைக்கும். அப்ரில்லா டுவானோ 660 பைக்கில், 659 சிசி, லிக்யூட்-கூல்டு, டிஓஹெச்சி, பேரலல் ட்வின்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,500 ஆர்பிஎம்மில் 94 பிஎச்பி பவரை உருவாக்கும்.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் 8,500 ஆர்பிஎம்மில் 67 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்-அஸிஸ்ட் கிளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தனது ஃபுல்-ஃபேர்டு (Full-faired) உடன்பிறப்பான அப்ரில்லா ஆர்எஸ் 660 (Aprilia RS 660) பைக்கின் அடிப்படையில்தான் அப்ரில்லா டுவானோ 660 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

எனினும் அப்ரில்லா டுவானோ வி4 (Aprilia Tuono V4) பைக்கின் டிசைன் அம்சங்கள், அப்ரில்லா டுவானோ 660 பைக்கிலும் காணப்படுகின்றன. முன் பகுதியில் இந்த பைக் முரட்டுதனமாக உள்ளது. அப்ரில்லா டுவானோ 660 பைக்கில், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

மேலும் எல்இடி டெயில்லேம்ப்கள், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், ஸ்பிளிட்-சீட், 15 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளிட்ட வசதிகளையும் அப்ரில்லா டுவானோ 660 பைக் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த பைக்கில் மொத்தம் 5 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 3 ரைடிங் மோடுகள் பிரத்யேகமாக சாலைக்கானது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

எஞ்சிய 2 ரைடிங் மோடுகள் டிராக் பயன்பாட்டிற்கானது. மேலும் அப்ரில்லா டிராக்ஸன் கண்ட்ரோல், அப்ரில்லா வீலி கண்ட்ரோல், அப்ரில்லா க்ரூஸ் கண்ட்ரோல், அப்ரில்லா இன்ஜின் பிரேக், அப்ரில்லா இன்ஜின் மேப், கார்னரிங் ஃபங்ஷன் உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளையும் அப்ரில்லா டுவானோ 660 பைக் பெற்றுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர 5 இன்ச் டிஎஃப்டி ஸ்பிளிட்-ஸ்க்ரீன் லே-அவுட்டும் அப்ரில்லா டுவானோ 660 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள அனைத்து எலெக்ட்ரானிக் உதவிகளையும் கட்டுப்படுத்துவதற்கு இது உதவி செய்கிறது. ஒட்டுமொத்தத்தில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இந்த பைக் இருக்கும் என கருதப்படுகிறது.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

மேலும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் கனெக்டட் தொழில்நுட்பத்திற்காக அப்ரில்லா எம்ஐஏ மல்டிமீடியா பிளாட்பார்மையும் அப்ரில்லா நிறுவனம் ஆப்ஷனலாக வழங்குகிறது. அப்ரில்லா டுவானோ 660 பைக்கில் அலுமினியம் ட்யூயல் பீம் சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் வீல்பேஸ் நீளம் 1,370 மிமீ. நீளம் 1,995 மிமீ, அகலம் 805 மிமீ, இருக்கை உயரம் 820 மிமீ ஆகும்.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அப்ரில்லா டுவானோ 660 பைக்கின் எடை 183 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸனை பொறுத்தவரை முன் பகுதியில் 41 மிமீ கயாபா யூஎஸ்டி ஃபோர்க்கும், பின் பகுதியில் மோனோ-ஷாக் யூனிட்டும் வழங்கப்பட்டுள்ளது. Compression, Rebound மற்றும் Preload ஆகியவற்றுக்கு இவை இரண்டுமே முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும்.

மிகவும் விலை உயர்ந்த பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த அப்ரில்லா... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் பிரேக்கிங்கை பொறுத்தவரை, முன் பகுதியில் ப்ரம்போ 4-பாட் ரேடியல் காலிபர்களுடன் 320 மிமீ ட்யூயல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ப்ரம்போ காலிபர்கள் உடன் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் அப்ரில்லா டுவானோ 660 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Aprilia tuono 660 launched in india here are all the details
Story first published: Thursday, September 2, 2021, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X