மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

Ather Energy நிறுவனத்தின் 450 Plus மின்சார ஸ்கூட்டரின் விலை ஒற்றை மாநிலத்தில் 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம். வாங்க.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி (Ather Energy). இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் புகழ்வாய்ந்த தயாரிப்பாக 450 ப்ளஸ் (450 Plus) மாடல் மின்சார ஸ்கூட்டர் இருக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

இதன் விலையே நாட்டின் குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் பெருமளவில் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் நமது நாட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மின் வாகனத்தின் பக்கம் நாட்டு மக்களை ஈர்க்கும் விதமாக அரசு எடுத்து வரும் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று மானியம் வழங்குதல்.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

இதனை ஒன்றிய அரசு மட்டுமின்றி மாநில அரசுகள் சிலவும் வழங்கி வருகின்றன. இதுமாதிரியான ஓர் சலுகையை வழங்கியிருப்பதனாலேயே ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ஓர் மாநிலத்தில் பல மடங்கு வரை குறந்திருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே ஏத்தர் எலெட்க்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

சுமார் 20 சதவீதம் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மானியம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ரூ. 24 ஆயிரம் வரை மானியம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், மஹாராஷ்டிராவில் ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.03 லட்சமாக குறைந்திருக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

இதுகுறித்த தகவலை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனரான தருண் மேதா

டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். "மஹாராஷ்டிரா அரசு ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானிய விண்ணப்பத்தை அங்கீகரித்திருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்".

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

மானிய அறிவிப்பால் நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. தொடர்ந்து, 125சிசிக்கும் குறைவான திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மின்சார வாகனங்களுக்கும் இது தற்போது போட்டியாக மாறியிருக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

அதேவேலையில், இதன் விலை குறைக்கப்பட்டும் மஹாராஷ்டிராவின் காஸ்ட்லியான இ-வாகனங்களில் ஒன்றாக ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஆம், இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதனால் தற்போதும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் வாகனமாகவே காட்சியளிக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

குறிப்பாக, மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் காட்டிலும் இதன் விலை சற்று அதிகமாகவே காட்சியளிக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒன்றிய அரசின் மானியம் மற்றும் மாநில அரசின் மானியம் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டநிலையில் அதன் விலை ரூ. 94,999 ஆக இருக்கின்றது. இதுவும் ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

எனவே சிறப்பம்சங்களும் இதில் அதிகம். கடந்த வாரமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருந்தநிலையில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதன் வருக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. நாளைய (செப்டம்பர் 15) தினத்திற்கு இதன் வருகை அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையில் மஹாராஷ்டிரா அரசு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியத்தை அங்கீகரித்திருக்கின்றது. இது ஓலா மற்றும் பிற மின்சார வாகனங்களுடன் ஏத்தர் 450 ப்ளஸ் கணிசமான போட்டியை வழங்க உதவியாக இருக்கும்.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 116கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் மற்றுமொரு சிறப்பு வசதியாக இதன் பிக்-அப் திறன் இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.3 செகண்டுகளிலேயே எட்டி விடும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மத்த மாநிலங்களை காட்டிலும் இங்கே மட்டும்தான் விலை ரொம்ப கம்மி... கொடுத்து வச்சவங்க இந்த மாநில வாசிங்க!

ரிவர்ஸ், அதிக ஸ்டோரேஜ் வசதி, வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சார்ஜ் நிரம்பிவிட்டால் தானாக சார்ஜ் ஏற்றுவதை நிறுத்தும் வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Ather 450 plus price reduced in maharastra
Story first published: Tuesday, September 14, 2021, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X