டுவிட்டரை அனல் பறக்க வைத்த ஏத்தர்! இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்! கிலியில் போட்டி நிறுவனங்கள்!

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் டுவிட்டர் பதிவின் வாயிலாக அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திணற வைத்திருக்கின்றது. அப்படி என்ன அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரு விதமான தேர்வுகளில் அது கிடைக்கும். ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் மிக விரைவில் அவற்றை டெலிவரி செய்வதற்கான பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

மேலும், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்து (ஓட்டி) பார்க்கும் வாய்ப்பை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒவ்வொரு நகரமாக இப்பணி தொடங்கப்பட்டு வருகின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் ஓலா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இந்த நிலையில், ஓலா நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் பொருட்டு அந்தந்த நிறுவனங்களும் தங்கள் சார்பில் வாடிக்கையாளர்களைக் கவரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ஓர் தரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

நிறுவனம், முன்னதாக கட்டணத்தின்கீழ் வழங்கி வந்த இணைப்பு சேவைகளை தற்போது கட்டணம் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கின்றது. கன்னெக்ட் ப்ரோ (Connect Pro) மற்றும் கன்னெக்ட் லைட் (Connect Lite) எனும் இரு விதமான சந்தாக்களை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இவற்றையே இன்றில் (நவம்பர் 15) இருந்து இலவசம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆறு மாதங்கள் இந்த இலவச சலுகை பயன்பாட்டில் இருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த வருடம் (2022ம் ஆண்டு) மே 15ம் தேதி வரை ஏத்தர் எனர்ஜி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கன்னெக்ட் ப்ரோ மற்றும் கன்னெக்ட் லைட் வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இணைப்பின் வாயிலாக பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேவிகேஷன், தனிப்பட்ட பயண விபரங்கள், ரிமோட் வாயிலாக சார்ஜாகும் அளவை கண்கானிக்கும் வசதி மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட் என பல்வேறு சேவைகளை அது இணைப்பு வாயிலாக வழங்கி வருகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இந்த சேவைகளையே நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த பதிவு ஏத்தர் வாடிக்கையாளர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

வாடிக்கையாளர்கள் எந்தெந்த பேக்கேஜை ஆக்டிவேட் செய்திருக்கின்றார்களோ அதே பேக்கேஜே இலவசமாக தொடரும் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் ஏத்தரின் கன்னெக்ட் லைட் பேக்கேஜை ஆக்டிவேட் செய்திருந்தால், அந்த பேக்கேஜே தற்போது இலவசமாக தொடர இருக்கின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

ஒரு வேலை ஏற்கனவே இதற்கான கட்டணத்தைச் செலுத்தி இருந்தால் அப்பணத்தை திரும்ப வழங்குவதற்கான முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இணைப்பு பேக்கேஜ் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எவ்வளவு பேட்டரி சார்ஜ் திறன் இருக்கின்றது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இதுமட்டுமின்றி பல தரமான சேவைகளை இந்த இணைப்பு பேக்கேஜ்களின் வாயிலாக நிறுவனம் வழங்கி வருகின்றது. ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், தற்போது நாட்டில் இரு விதமான மின்சார ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 450 ப்ளஸ் மற்றும் 450எக்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. குறிப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்கூட்டர் பிரிவில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 நகரங்களாக உயர்த்தவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 நகரங்களுக்கும் அதிகமாக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம், சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஏத்தர் கிரிட் என்ற பெயரில் அது பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த நெட்வொர்க்கையும் அதிகரிக்கும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது. மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்க இந்த யுக்தி கையாளும் என நிறுவனம் நம்புகின்றது.

இன்று முதல் அனைத்து இணைப்பு சேவையும் இலவசம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வாடிக்கையாளர்களை திணறடித்த பிரபல நிறுவனம்!

மிக சமீபத்தில் நிறுவனம், அதன் ஜென் க்ரிட் 2.0 எனும் அதி வேக சார்ஜிங் கருவியை அறிமுகப்படுத்தியது. ஓடிஏ போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த கருவி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 2022ம் நிதியாண்டிற்குள் இந்த சார்ஜிங் கருவியை இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 500க்கும் அதிகமான இடங்களில் நிறுவ ஏத்தர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஏத்தர் #ather energy
English summary
Ather announced all connectivity features free from today here is full details
Story first published: Monday, November 15, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X