அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?..

ஒன்றிய அரசின் தடாலடியால் ஏத்தர் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலையைக் குறைத்தது ஏத்தர் எனெர்ஜி நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மானியம் வழங்கி வருகின்றது. ஃபேம்2 திட்டத்தின்கீழ் இதனை அரசு வழங்கி வருகின்றது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

இந்த திட்டத்திலேயே மத்திய அரசு தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இதனால், மின்சார வாகனங்களுக்கான மானியம் மேலும் கூடியிருக்கின்றது. ஆகையால், மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

ஃபேம்2 திட்டத்தின் வாயிலாக முன்பு ஒரு கிலோவாட் (kWh) பேட்டரிக் கொண்ட மின் வாகனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை தற்போது 50 சதவீதம் வரை அரசு அதிகரித்துள்ளது. அதாவது, ரூ. 15 ஆயிரமாக மானியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின் வாகனங்களின் விலைக் கணிசமாக குறையும் நிலை உருவாகியுள்ளது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில், பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் அதன் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலையில் ரூ. 14,500 வரை குறைத்துள்ளது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1.59 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது. இனி ரூ. 1.44 லட்சம் என்ற விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். இது பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மின்சார ஸ்கூட்டர் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் சில மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

அந்தவகையில், சென்னையிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.9kWh பேட்டரி பேக், 6kW மின் மோட்டார் ஆகியவற்றில் இந்த ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வாகனத்திற்கு 3 வருடங்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லா வாரண்டியை ஏத்தர் வழங்கி வருகின்றது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

ஏத்தர் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் 3.3 செகண்டுகளிலேயே மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா இப்போ ஒன்ன புக் பண்ண நினைப்பீங்க!

மானியம் அதிகரிப்புகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான தருண் மேத்தா கூறியதாவது, "ஃபேம் கொள்கையில் திருத்தம் செய்து ஒரு கிலோவாட்டிற்கு 50 சதவீதம் வரை மானியம் அதிகரித்திருப்பது ஒரு தனித்துவமான நடவடிக்கை ஆகும். இதன்மூலம் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது" என்றார்.

Most Read Articles
English summary
Ather Cuts 450X EV Price Due To FAME II Scheme Incentives Revision. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X