வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

வரும் ஜூன் 30ம் தேதி வரை கரண்ட் ஃப்ரீ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

கர்நாடாக மாநிலம் பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி. இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தற்போது ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 ப்ளஸ் என இரு விதமான தேர்வுகளில் இ-ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வரும் தனது வாடிக்கையாளர்களுக்கே மின்சாரம் இலவசம் என ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஏத்தர் எனர்ஜி நாடு முழுவதும் கணிசமான சார்ஜிங் மையங்களை 'ஏத்தர் க்ரிட்' (Ather Grid) எனும் பெயரில் இயக்கி வருகின்றது. இப்பெயரின்கீழே நாட்டின் முக்கிய நகரங்களில் 200 சார்ஜிங் மையங்களை நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

இந்த சார்ஜிங் மையங்கள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அனைத்து மின்சார இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களும் உபயோகிக்கும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. இந்த சார்ஜிங் மையங்களை தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

இந்த இலவச திட்டமானது வரும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நிலுவையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இனி புதியதாக ஏத்தர் எலெக்ட்ரிக் இ-ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களும் இந்த மையங்களைப் பயன்படுத்தி இலவசமாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த அறிவிப்பை ஏத்தர் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

மிக சமீபத்தில் நிறுவனம் அதன் இணைப்பு வசதியை இலவசமாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த இலவசத்தை வரும் 2022 மே 15 வரை நீட்டித்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இச்சலுகை கடந்த நவம்பர் 15ம் தேதியில் இருந்தே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தனது சார்ஜிங் மையங்களையும் தனது வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏத்தர் அறிவித்திருக்கின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

ஏத்தர் இணைப்பு சிறப்பு வசதியானது கன்னெக்ட் லைட் (Connect Lite) மற்றும் கன்னெக்ட் ப்ரோ (Connect Pro) என்று விதமான தேர்வுகளில், மாத சந்தா திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனையே நிறுவனம் இலவசமாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் சந்தா செலுத்தியவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏத்தர் தெரிவித்தது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

ஆகையால், ஏற்கனவே சந்தா கட்டணத்தைச் செலுத்தியவர்களுக்கு இந்த தகவல் ஆறுதலாக அமைந்தது. இந்த இணைப்பு வசதியின் வாயிலாக பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேவிகேஷன், தனிப்பட்ட பயண விபரங்கள், ரிமோட் வாயிலாக சார்ஜாகும் அளவை கண்கானிக்கும் வசதி மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட் என பல்வேறு சேவைகளை அது வழங்கி வருகின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

இதனையே வாடிக்கையாளர்களுக்கு இலவசம் என நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதுமட்டுமின்றி, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதன் உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் களமிறங்கியிருக்கின்றது. இந்நிறுவனம் தமிழகத்தின் ஓசூரில் அதன் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டிருக்கின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை கையிலெடுத்திருக்கின்றது, ஏத்தர் எனர்ஜி. நிறுவனம் அதன் உற்பத்தி அளவான 1.20 லட்சம் யூனிட்டை 4 யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே புதிய உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. சுமார் 650 கோடி முதலீட்டை இதற்காக நிறுவனம் ஒதுக்கியிருக்கின்றது.

வரும் ஜூன் 30 வரை கரண்ட் ஃப்ரீ... எல்லாருக்கும் கிடையாது... அவங்களுக்கு மட்டும்தான்! 2021இன் தரமான அறிவிப்பு!

ஏத்தர் நிறுவனம் தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அதன் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனை வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 நகரங்களாக உயர்த்தவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 நகரங்களுக்கும் அதிகமாக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்துடன், தனது சார்ஜிங் மையங்களையும் அதிகரிக்கச் செய்யும் பணிகளில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது.

Most Read Articles
English summary
Ather energy annonces free charging untill june 30 next year here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X