150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் தான் எஃப்.இசட்-எக்ஸ் ஆகும். இந்த புதிய யமஹா பைக்கிற்கு நாடு முழுவதில் இருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எஃப்.இசட்-எக்ஸ் சில வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்மறையான கருத்துகளை பெற்றுள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிளை சமூக வலைத்தளங்களில் யமஹா விளம்பரப்படுத்தி வருவதால் இது பெரிய அளவில் பாதிக்காது.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

இப்படியிருக்க, பிரத்யேகமாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் படங்கள் ‘கஸ்டமைஸ்ட் எஃப்.இசட்-எக்ஸ் சேலஞ்' ஹாஸ்டேக்கில் யமஹா நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

இந்த ரெட்ரோ-ஸ்டைல் பைக்கை கஸ்டமைஸ்ட் செய்வதை ஊக்கப்படுத்தவே இத்தகைய ஹாஸ்டேக்குகளை யமஹா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எந்த கஸ்டமைஸ்ட் எஃப்.இசட்-எக்ஸ் பைக் நெட்டிசன்களின் மனதை கவர்கிறதோ அதுவே வெற்றி பைக்காக கருதப்படும்.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

இந்த போட்டியில் ஒரு கஸ்டமைஸ்ட் நிறுவனமாகவோ அல்லது தனி ஒருவராகவோ கலந்து கொள்ளலாம் என யமஹா தெரிவித்துள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டை இந்த ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் பெறலாம்.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

இந்த போட்டியில் ஏற்கனவே பலர் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலரின் பெயரை யமஹா நிறுவனம் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வகையில் ஆட்டோலாக் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் மெருக்கேற்றப்பட்ட பைக்கை தான் இந்த படங்களில் பார்க்கிறீர்கள்.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

புனேவை சேர்ந்த இந்த கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் ரெட்ரோ-ஸ்டைல் கொண்ட யமஹா பைக், கேஃப் ரேஸர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கின் ரியல்லைஃப் படத்தினை பார்க்கலாம் என நம்புவோம்.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

1960களில் இருந்த ரெட்ரோ கேஃப் ரேஸர் பைக்குகளின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் முன்பக்கத்தில் ஜெட் போன்றதான ஹெட்லைட் பேனலை கொண்டுள்ளது. இதனால் பைக்கின் காற்று இயக்கவியல் பண்பு மேம்பட்டுள்ளது.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

மஞ்சள் நிற பெயிண்ட் பைக்கின் ரெட்ரோ தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக உள்ளது. இந்த வகையில் மஞ்சள் நிறத்தில் உள்ள பெட்ரோல் டேங்கில் கருப்பு நிற ஸ்ட்ரிப்-பும், கருப்பு நிற அலாய் சக்கரங்களில் ஒரு பக்கம் நீலமும், மறுபக்கம் சிவப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

150சிசி கஸ்டம் யமஹா எஃப்.இசட்-எக்ஸ்!! பலரது மனதை கவர்ந்த கஸ்டமைஸ்ட் பைக்!

பைக்கில் மற்ற கவனிக்கக்கூடிய அம்சங்களாக வட்ட வடிவிலான பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், புதிய பக்கவாட்டு பேனல்கள், அடர் பழுப்பு நிறத்தில் இருக்கை கவர் மற்றும் சிறிய வட்ட வடிவிலான எல்இடி டெயில்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZ-X 150cc Custom Cafe Racer Officially Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X