மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

பஜாஜ் சிடி100, பிளாட்டினா பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

கடந்த சில வாரங்களாக வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பஜாஜ் நிறுவனமும் சமீபத்தில் அதன் பல்சர் மற்றும் டோமினார் பைக்குகளின் விலைகளை உயர்த்தி இருந்தது.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

அவற்றை தொடர்ந்து தற்போது சிடி100, பிளாட்டினா பிஎஸ்6 பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் ரூ.749ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.1,696 வரையில் உயர்ந்துள்ளன.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

சிடி100 பஜாஜ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மலிவான பைக் மாடலாக விளங்குகிறது. அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.47,654ல் இருந்து ரூ.1,498 அதிகரிக்கப்பட்டு ரூ.49,152 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

பஜாஜ் சிடி100 பைக்கில் 99.72சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 8.1 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 8.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

பஜாஜ் சிடி வரிசையில் 110சிசி-யிலும் மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது. சிடி110 மோட்டார்சைக்கிளின் அலாய் மற்றும் அலாய் எக்ஸ் வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.1,693 மற்றும் ரூ.1,356 உயர்த்தப்பட்டுள்ளன.

Model New Price Old Price Difference
CT100 KS Alloy ₹49,152 ₹47,654 ₹1,498
CT110 ES Alloy ₹53,498 ₹51,802 ₹1,696
CT110 ES Alloy X ₹55,494 ₹54,138 ₹1,356
Platina 100 KS Alloy ₹52,915 ₹52,166 ₹749
Platina 100 ES Drum ₹54,669 ₹53,920 ₹749
Platina 110 5-speed Drum ₹60,608 NA NA
Platina 110 H-Gear Disc ₹63,424 ₹64,301 - ₹877
Platina 110 ES ABS ₹67,424 ₹65,920 ₹1,504
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

சிடி110 பைக்குகளில் 115.45சிசி ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இதன் என்ஜின் 7,000 ஆர்பிஎம்-இல் 8.48 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 9.81 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

சிடி வரிசையை போன்று பஜாஜ் பிளாட்டினா பைக்குகளும் 100சிசி-யில் மற்றும் 110சிசி-யில் கிடைக்கின்றன. இதில் 100சிசி வெர்சனின் விலை 749 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்படுகின்ற 102சிசி ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 7.79 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 8.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

பிளாட்டினா 110 எச்-கியர் டிஸ்க் மற்றும் 110 இஎஸ் ஏபிஎஸ் பைக்குகளின் விலைகள் முறையே ரூ.877 மற்றும் ரூ.1,504 உயர்ந்துள்ளன. ஆனால் பிளாட்டினா 110 ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

சிடி110 பைக்கில் பொருத்தப்படுகின்ற 115.45சிசி என்ஜின் தான் பிளாட்டினா 110சிசி பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது. அதேபோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...

ஆனால் பஜாஜ் பிளாட்டினா எச்-கியர் பைக்கில் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலும் மோட்டார்சைக்கிள்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
2021 Bajaj CT100, Platina BS6 Range Receive A Price Hike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X