பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

பல்சர் பிராண்டில் 250சிசி பைக்குகள் அறிமுகமாகிவிட்டன. ஆதலால் 2022 பஜாஜ் பல்சர் ஆர்எஸ்250 மோட்டார்சைக்கிளின் வருகையையும் எதிர்பார்க்கலாமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்களினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

சமீபத்திய புதிய பல்சர் 250 பைக்குகளான என்250 மற்றும் எஃப்250 பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிராண்டிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு 150சிசி & 180சிசி-இல் ஆரம்பிக்கப்பட்ட பல்சர் வரிசை தற்போது நீளமாக விரிவடைந்துள்ளது.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

இத்துடன் புனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் நின்றுவிட போவதில்லை. ஏனெனில் புனேவில் சாகானில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் ஆட்டோ அதன் தற்போதைய பல்சர் மாடல்களுக்கு பதிலாக புதிய சேசிஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

250சிசி-இல் என்250 & எஃப்250 என இரு விதமான தோற்றங்களில் பல்சர் பைக்குகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆதலால் அடுத்ததாக இவற்றை காட்டிலும் விலைமிக்கதாக, அதிகளவில் பேனல்களால் நிரப்பப்பட்ட ஆர்எஸ்250 பைக்கையே பஜாஜ் களமிறக்க பார்க்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அப்போதுதான் பல்சர் வரிசை முழுமையாக நிறைவடையும் என கருதுகிறோம்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

பல்சர் பைக்குகளிலேயே உயர்தரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ள ஆர்எஸ்250-ஐ வடிவமைக்கும் விஷயத்தில் நிச்சயமாக விற்பனையில் உள்ள ஆர்எஸ்200-ஐ ஒரு கண்ணோட்டம் பஜாஜ் நிறுவனம் பார்த்து கொள்ளும். ஏனெனில் இரண்டிற்கும் இடையே பெயரை தவிர்த்து சில விஷயங்களில் வேறுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் இந்த நிறுவனம் தெளிவாக இருக்கும் என்றே தெரிகிறது.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

இதனால் என்250 & எஃப்250 பைக்குகளின் சில டிசைன்களின் அடிப்படையில் தான் ஆர்எஸ்250 உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிங்கிள்-பீம் பிரோஜெக்டர் ஹெட்லைட், அதனுடன் இரு பக்கத்திலும் எல்இடி டிஆர்எல்கள் ஆர்எஸ்250-இல் வழங்கப்படலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், மற்ற இரண்டை காட்டிலும் இந்த 250சிசி பல்சர் பைக் அதிகளவில் பேனல்களை பெற்றுவரும்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

இதன்படி என்ஜின் அமைப்பு முழுவதுமாகவோ அல்லது பெரும்பகுதிகளோ மூடப்பட்ட நிலையில் வடிவமைக்கப்படலாம். அதேபோல் பின் சக்கரத்திற்கு மேலேயும் கூடுதல் பேனல்கள் வழங்கப்படலாம். அத்துடன் முன்பக்க மட்கார்ட் உள்ளிட்ட சில பாகங்களின் வடிவமும் பைக்கின் பெரிய தோற்றத்திற்கு ஏற்ப சற்று பெரியதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

செமி-ஸ்போர்ட்ஸ் பைக்கான எஃப்250-லேயே முன்பக்கத்தில் நீளமான விண்ட்ஸ்க்ரீனை பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆதலால் ஆர்எஸ்250-இல் அதனை காட்டிலும் எதிர்வரும் காற்றை தடுப்பதற்கும், பைக்கின் காற்றியக்கவியல் பண்பை மேம்படுத்தும் வகையிலும் பொருத்தப்படும் இந்த வின்ட்ஸ்க்ரீன் நீளமானதாக வழங்கப்படலாம்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

அதேபோல் பெட்ரோல் டேங்க் பகுதி மற்ற இரு 250சிசி பல்சர் பைக்குகளை காட்டிலும் பெரியதாக ஆர்எஸ்250-இல் கொடுக்கப்படும். அதில் எவ்வளவு எரிபொருள் பிடிக்கும் என்ற அளவுகளை எல்லாம் தெரிந்து கொள்ள பைக்கின் அறிமுகம் வரையில் காத்திருக்க வேண்டும். மற்றப்படி பின்பக்க முனைப்பகுதியும், அதில் பொருத்தப்படும் எல்இடி டெயில்லேம்ப்களும் பெரியதாக எந்த மாற்றத்தையும் பெறாது என்றே கூறப்படுகிறது.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

ஏனெனில் புதிய என்250 & எஃப்250 பைக்குகளிலும் பஜாஜ் நிறுவனம் பின்பக்க டெயில்லேம்ப்பின் வடிவத்தில் கை வைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய 250சிசி பைக்குகளை போன்று, புதிய ஆர்எஸ்250-ஐயும் முரட்டுத்தனமானதாக காட்ட பின் இறுதி முனை பகுதி சற்று மேல்நோக்கி தூக்கப்படலாம். மேலும் பிளவுப்பட்ட வடிவிலான கைப்பிடிகள் பொருத்தப்படலாம்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

ஆர்எஸ்250 பைக்கில் மற்ற அம்சங்களாக பிளவுப்பட்ட இருக்கை இருக்கை அமைப்பு, நறுக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், என்ஜினிற்கு அடியில் கௌல் மற்றும் பின்பக்க டயர் பிடிப்பான் உள்ளிட்டவை அப்படியே தொடரப்படலாம். மேலும் அலாய் சக்கரங்களின் ரிம்கள் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக்குகளில் வழங்கப்படுவதை போன்று வண்ண நிறங்களில் கொடுக்கப்படலாம்.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

அலாய் சக்கரங்களின் டிசைன் எஃப்250-இல் இருந்து வேறுப்படும் வகையில் ஆர்எஸ்250-இல் பொருத்தப்படும். மற்றப்படி இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தற்போதைய பல்சர் 250 பைக்குகளின் அதே 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஒஎச்சி, 2-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜினே பொருத்தப்படும். அதிகப்பட்சமாக 24.5 பிஎச்பி மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பல்சர் ஆர்எஸ்250 பைக் அறிமுகமாக வாய்ப்பிருக்கா? எத்த மாதிரியான தோற்றத்தில் இதனை எதிர்பார்க்கலாம்?

என்ஜின் அமைப்பு மட்டுமின்றி மற்ற இயந்திர பாகங்களும் புதிய ஆர்எஸ்250-இல் வழக்கமானவைகளாகவே இருக்கும். ஆர்எஸ்250 என்பது ஆர்எஸ்200-ஐ வைத்து நாங்களாக கூறும் பெயரே தவிர்த்து இதனை எந்த விதத்திலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. ஆதலால் இந்த புதிய 250சிசி பைக்கின் பெயர் வேறாக சூட்டப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

Most Read Articles

English summary
Bajaj auto might contemplate third one by introducing pulsar rs250
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X