Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1,28,642 யூனிட் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. மொத்தம் விற்பனையான மோட்டார்சைக்கிள்களில் பஜாஜ் மோட்டார்சைக்கிள்களின் இந்த விற்பனை எண்ணிக்கை 11.41 சதவீதமாகும்.

2019ஆம் வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 3.6 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அப்போது 1,24,125 யூனிட் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இதற்கு முந்தைய 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.42 சதவீதம் குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்த விற்பனையில் 11.82 சதவீதம் பஜாஜ் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பஜாஜ் நிறுவனத்திற்கு எப்போதுமே பல்சர் வரிசை பைக்குகள் தான் கைக்கொடுகின்றன.

பல்சர் பைக்குகளை 125சிசி, 150சிசி, 180சிசி, 200சிசி மற்றும் 220சிசி-களில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் 125சிசி பல்சர் பைக்குகளை மட்டுமே கடந்த ஆண்டில் சுமார் 42,686 யூனிட்கள் இந்த நிறுவனம் விற்றுள்ளது. 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 183 சதவீதம் அதிகமாகும்.

அதேபோல் 180சிசி+200 என்எஸ் பைக்குகள் 2019 டிசம்பரை காட்டிலும் 59 சதவீதம் அதிகமாக 8,279 யூனிட்களும், பல்சர் 220 பைக்குகள் 17 சதவீதம் அதிகமாக 4,498 யூனிட்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 150சிசி பல்சர் பைக்குகளின் விற்பனை 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைந்துள்ளது. பல்சர்150 பைக்கின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 19,958 ஆகும். பல்சருக்கு பிறகு பஜாஜிற்கு பிளாட்டினா சிறந்த விற்பனை மாடலாக விளங்குகிறது.
Rank | Models | Dec 2020 | Dec 2019 | Growth (%) |
1 | Pulsar 125 | 42,686 | 15,082 | 183 |
2 | Platina | 30,740 | 35,914 | -14 |
3 | Pulsar 150 | 19,958 | 26,778 | -25 |
4 | CT100 | 13,835 | 30,758 | -55 |
5 | Pulsar 180 + 200NS | 8,279 | 5,223 | 59 |
6 | Pulsar 220 | 4,498 | 3,848 | 17 |
7 | Avenger 160 | 1,333 | 2,112 | -37 |
8 | Avenger 220 | 643 | 402 | 60 |
9 | Dominar 400 | 411 | 180 | 128 |
10 | Dominar 250 | 364 | - | 7 |
11 | Chetak Electric | 3 | - | - |

ஆனால் 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பஜாஜ் சிடி100 பைக்குகளின் விற்பனை சுமார் 55 சதவீதம் குறைந்துள்ளது. அவென்ஜெர் 180 மற்றும் 220 பைக்குகள் முறையே 1,333 மற்றும் 643 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. புதிய அறிமுகமான டோமினார் 250 கடந்த மாதத்தில் 364 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 3 பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.