2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2021 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வணிக பயன்பாட்டிற்கான கமர்ஷியல் வாகனங்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 3,79,276 யூனிட் வாகனங்களை இந்தியாவிலும், வெளிநாட்டு சந்தைகளிலும் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

இதில் 1,58,755 உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் வாகனங்களும், 2,20,521 வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் வாகனங்களும் அடங்குகின்றன. ஆனால் 2020 நவம்பரில் மொத்தம் 4,22,240 யூனிட் வாகனங்களை உலகளவில் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்திருந்தது. அப்போது பஜாஜின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தை எட்டியிருந்தது.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி எண்ணிக்கை அதனை காட்டிலும் சற்று அதிகமாக 2,23,307 யூனிட்களாக இருந்தது. இவற்றின் மூலம் இந்தியாவை காட்டிலும், புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்காகவே அதிகளவில் வாகனங்களை தயாரிப்பதை அறியலாம்.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

இருசக்கர வாகனங்களை பொறுத்தவரையில், உள்நாட்டு விற்பனை & வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து கடந்த 2021 நவம்பரில் மொத்தம் 3,38,473 2-வீலர்ஸை பஜாஜ் உலகளவில் விற்பனை செய்துள்ளது. அதுவே கடந்த ஆண்டு இதே நவம்பரில் 12% அதிகமாக 3,84,993 யூனிட் 2-வீலர்ஸை பஜாஜ் உலகளவில் விற்பனை செய்திருந்து.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

கடந்த மாதத்தில், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் 2 வீலர்ஸின் எண்ணிக்கையில் பெரியதாக மாற்றமில்லை. ஆனால் உள்நாட்டு விற்பனை கிட்டத்தட்ட 23% குறைந்துள்ளது. அதாவது 43 ஆயிரம் குறைவு. மறுப்பக்கம் பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளுக்கான கமர்ஷியல் வாகன ஏற்றுமதி 2% அதிகரித்திருக்க, உள்நாட்டு விற்பனை 29% அதிகரித்துள்ளது.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

அதாவது 2020 நவம்பரில் 10,737 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த நவம்பரில் 13,802 யூனிட் கமர்ஷியல் வாகனங்களை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 2021 ஏப்ரல்- நவம்பர் மாதம் வரையிலான கடந்த 8 மாத காலக்கட்டத்தில் மொத்தம் 29,69,312 யூனிட் வாகனங்களை (2-வீலர்ஸ் & 3-வீலர்ஸ்) பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

கடந்த ஆண்டு, இதே 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பஜாஜ் வாகனங்களின் உலகளாவிய விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏனெனில் 2020 ஏப்ரல்- நவம்பர் மாதங்களில் 24,30,718 யூனிட் பஜாஜ் வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தன. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பஜாஜ் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் சுமார் 5 லட்சத்திற்கு குறைந்திருப்பது காரணம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது, கொரோனா வைரஸ்.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த ஆண்டு மத்தியில் நாடு தழுவிய அளவில் அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாகன விற்பனையை சில காலத்திற்கு அப்படியே நிறுத்தி வைத்திருந்தன. இருப்பினும், கடந்த 8 மாதங்களில் 11,74,391 யூனிட் இருசக்கர வாகனங்களை பஜாஜ் ஆட்டோ இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைவாகும்.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

2020 ஏப்ரல்- நவம்பரில் 11,93,002 யூனிட் இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. முழு ஊரடங்கு அமலில் இருந்த 1.5 மாதங்களை கழித்து பார்த்தோமேயானால், வெறும் 6.5 மாதங்களில் இந்த இமாலய எண்ணிக்கையை பஜாஜ் நிறுவனம் அடைந்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளுக்கு கடந்த ஏப்ரலில் இருந்து 14,85,605 யூனிட் பஜாஜ் 2-வீலர்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

ஆனால் கடந்த ஆண்டில் 10 லட்சத்திற்கு சற்று அதிகமான எண்ணிக்கையிலேயே 2-வீலர்ஸை பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதி செய்திருந்தது. இதில் இருந்து ஊரடங்கினால் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி பெரியளவில் குறைந்திருப்பதை கணக்கிட முடிகிறது. அதேபோல், கமர்ஷியல் வாகன விற்பனை கடந்த 8 மாதங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் 47% அதிகரித்துள்ளது.

2021 நவம்பரில், பஜாஜ் 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 23% குறைவு!! ஆனால் விறுவிறுப்பாக கமர்ஷியல் வாகன விற்பனை!

2020 ஏப்ரல்- நவம்பரில் 2,11,051 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டில் இதே 8 மாதங்களில் ஏறக்குறைய 1 லட்ச யூனிட்கள் அதிகமாக 3,10,316 யூனிட் கமர்ஷியல் வாகனங்களை பஜாஜ் விற்றுள்ளது. உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 78% அதிகமாக 92,282 யூனிட் பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Sales Release - Bajaj Auto November 2021
Story first published: Wednesday, December 1, 2021, 23:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X