இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின் உற்பத்தி... குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு!!

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின் உற்பத்தி பணிகள் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புகழ் வாய்ந்த இரு சக்கர வாகன மாடல்களில் ஸ்வர்ட்பிளன் 125 பைக்கும் ஒன்று. இந்த பைக்கின் உற்பத்தியையே நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜாஜ்-ஸ்வர்ட்பிளன் கூட்டணியிலேயே இப்பைக்குகள் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

ஆகையால், ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின் உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ-வின் சக்கன் வாகன உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலை மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே இயங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கானது கேடிஎம் ட்யூக் 125 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் ஆகும். ஆகையால், இப்பைக்கில் கேடிஎம் ட்யூக் 125 பைக்கில் இடம் பெற்றிருக்கும் அதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

இந்த எஞ்ஜின் 125சிசி திறன் கொண்டது. லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பியையும், 12 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

இதுதவிர அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய அப்சைட்-டவுண் டபிள்யூபி அபெக்ஸ் ஃபோர்க் பைக்கின் முன்பக்கத்திலும், மோனோஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் தொழில்நுட்ப சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் வாகன உற்பத்தி ஆலையில் ஸ்வர்ட்பிளன் 125 பைக் மட்டுமின்றி ஸ்வர்ட்பிளன் 250, விட்பிளன் 250, ஸ்வர்ட்பிளன் 401 மற்றும் விட்பிளன் 401 ஆகிய இருசக்கர வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

இந்தியாவில் உற்பத்தியாகும் ஸ்வர்ட்பிளன் 125 பைக்குகளே ஐரோப்பிய சந்தைகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. ஆகையால், நம் நாட்டில் உற்பத்தியாகும் ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் பைக்குகளைக் காட்டிலும் இதன் விலை மிக குறைவாகவே இருக்கும்.

இந்தியாவில் தொடங்கியது ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 125 பைக்கின்... குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்பு!!

தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி ஸ்வர்ட்பிளேன் 125 பைக் ரூ. 1.25 லட்சத்தில் இருந்து ரூ. 1.30 லட்சம் வரையிலான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாதது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Bajaj Auto Started Husqvarna Svartpilen 125 Production In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X