சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் மீண்டும் ஏற்கவுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் பஜாஜ் நிறுவனத்தின் ஒரே ஒரு எலக்ட்ரிக் வாகனமாக சேத்தக் ஸ்கூட்டர் விளங்குகிறது. குறைகடத்தி பாகங்களின் தட்டுப்பாடு உள்ளிட்ட சில காரணங்களினால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை கடந்த ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

இதனால் மாதந்தோறும் 500 யூனிட்களுக்கு மேல் விற்பனையாகும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க தயாராகி வந்த வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம் சேத்தக்கின் விற்பனை நிறுத்தப்பட்டதால் விற்பனையில் அதற்கு போட்டியாக விளங்கிவரும் டிவிஎஸ் ஐக்யுப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கை சிறிது ஓங்கியது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

இருப்பினும், இன்னமும் சேத்தக்கிற்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களும் இருக்க தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே பஜாஜ் நிறுவனம் சேத்தக்கிற்கான முன்பதிவுகளை வருகிற ஏப்ரல் 13ஆம் தேதியில் இருந்து மீண்டும் துவங்க உள்ளது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

ஆனால் இம்முறை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே முன்பதிவுகள் ஏற்று கொள்ளப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ஆம் வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

மீண்டும் முன்பதிவு துவங்கும்போது சேத்தக் ஸ்கூட்டருக்கான எக்ஸ்ஷோரூம் விலை சிறிது அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழமையான ஸ்கூட்டர்களின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டாலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்தவொரு மாடர்ன் அம்சத்தையும் இழக்கவில்லை.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

ஹெட்லேம்ப் அமைப்பானது குதிரை லாடம் வடிவில் எல்இடி தரத்தில் பொருத்தப்படுகிறது. அதேபோல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முழு-டிஜிட்டல் தரத்தில் வழங்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரியை சேத்தக் ஏற்கிறது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

பஜாஜின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து அர்பன் மற்றும் ப்ரீமியம் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் ப்ரீமியம் வேரியண்ட்டில் கூடுதல் அம்சங்களாக ஒற்றை-இருக்கை, முன் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக் மற்றும் மெட்டாலிக் பெயிண்ட் தேர்வு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

இதனாலேயே சேத்தக் ப்ரீமியம் ஸ்கூட்டர் ரூ.15,000 கூடுதலாக ரூ.1.15 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் சந்தைப்படுத்தப்படுகிறது. அர்பன் வேரியண்ட்டில் மெட்டாலிக் பெயிண்ட் தேர்வு கொடுக்கப்படுவதில்லை.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

அதேபோல் டிஸ்க் ப்ரேக்கிற்கு பதிலாக முன்சக்கரத்தில் ட்ரம் ப்ரேக்கே வழங்கப்படுகிறது. இருப்பினும் இரு வேரியண்ட்களிலும் 16 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான 4.1 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?

இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகின்ற ஐபி67 சான்று பெற்ற பேட்டரி தொகுப்பு ஈக்கோ மோடில் 95கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட் மோடில் 85கிமீ தூரம் வரையிலும் ஸ்கூட்டரை இயங்க வைக்க போதுமானதாக உள்ளது. இவற்றிற்கு பஜாஜ் நிறுவனம் கவர்ச்சிகரமான உத்தரவாதங்களை வழங்கி வருகிறது.

Most Read Articles

English summary
Bajaj Chetak Electric Scooter Bookings Reopen Date Announced.
Story first published: Sunday, April 11, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X