பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

கொரோனா பிரச்னையால் தடைபட்டிருந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரிப் பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மாடலாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்து வருகிறது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிலிரிப் பணிகள் தடங்கள்க தாமதமாகி வருகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதலே, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் தடங்கல்களை சந்தித்து வருகிறது. கொரோனா பிரச்னையால் சப்ளையர்கள் ஆலைகள் மூடப்பட்டதால், உதிரிபாகங்கள் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13ந் தேதி சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் திறக்கப்பட்டது. ஆனால், அதிக புக்கிங் வரத் துவங்கியதால், 48 மணிநேரத்தில் புக்கிங் நிறுத்தப்பட்டது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

இந்த நிலையில், புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, வரும் பண்டிகை காலம் துவங்குவதற்கு முன்னதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பன் மற்றும் பிரிமீயம் என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. அர்பன் மாடல் ரூ.1.43 லட்சத்திலும், பிரிமீயம் மாடல் ரூ.1.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் அயான் பேட்டரியும், 4 kW மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 16 என்எம் டார்க் திறனை வழங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 95 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட் மோடில் 85 கிமீ தூரம் வரையிலும் செல்லும் வாய்ப்பை வழங்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், கீலெஸ் இக்னிஷன், ரிவர்ஸ் ரைடிங் மோடு, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களை பெற்றுள்ளது. பிரிமீயம் வேரியண்ட்டில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. 12,000 கிமீ அல்லது ஓர் ஆண்டு சர்வீஸ் இன்டர்வல் கொடுக்கப்படுகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி மீண்டும் துவங்குகிறது

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளதால், கூடிய விரைவில் சென்னையிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
English summary
Bajaj is all set to begin Chetak electric scooter delivery before the festive season. Read more details on Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X