புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலின் விலை மற்றும் புதிய மாற்றங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் டோமினார் 400 (Dominar 400)ம் ஒன்று. இந்த பைக்கையே தயாரிப்பு நிறுவனம் அப்டேட் செய்து (புதுப்பித்து) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதுப்பித்தலின் வாயிலாக நிறுவனம் என்ன மாற்றங்களை இப்பைக்கில் செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

புதுப்பித்தலின்கீழ் பஜாஜ் நிறுவனம், தனது நிர்வாகம் தயாரித்த டூரிங் அணிகலன்களைக் கொண்டு இப்பைக் அலங்கரித்திருக்கின்றது. ஆகையால், கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொண்ட டூரிங் இருசக்கர வாகனமாக பஜாஜ் டோமினார் 400 மாறியிருக்கின்றது. இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனுக்கு ரூ. 2,16,648 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

அரோரா பச்சை மற்றும் கரிகட்டை கருப்பு ஆகிய நிறங்களில் புதிய டோமினார் 400 விற்பனைக்குக் கிடைக்கும். புதிய அக்ஸசெரீஸ்கள் அனைத்தும் ஸ்டாண்டர்டாக டோமினார் 400 பைக்கில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அதேவேலையில், சேடில் தனி அணிகலனாகவே பஜாஜ் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வாயிலாக விற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

புதுப்பித்தலின்கீழ் தனித்துவமான தோற்றம் கொண்ட விசர் முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. காற்றில் இருந்தும், பிற வாகனங்களின் ஓட்டத்தினால் தெறிக்கும் சிறு கற்கள் மற்றும் துகள்களில் இருந்து காக்கும் பொருட்டு இது சற்று உயரமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

இத்துடன், லக்கேஜை ஏற்றி செல்லும் விதமாக பின்பக்கத்தில் கேரியர், பின் பக்க பயணிக்கான சிறிய தடுப்பான் உள்ளிட்டவையும் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், எஞ்ஜினை பாதுகாக்கும் வகையில் புதிய தோற்றம் கொண்ட கவசம், ஸ்கிட் பிளேட் மற்றும் தொடை பாதுகாப்பான்கள் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

தொடர்ந்து, புதிய ரூட்களில் பயணிக்கும்போது பாதை பற்றி அறிந்துக் கொள்ளும் விதமாக நேவிகேஷன் டிவைஸ், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களும் டோமினார் 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. 373.3 சிசி திறனை வெளியேற்றக் கூடிய பிஎஸ் 6 எஞ்ஜினே பஜாஜ் டோமினார் 400 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

டிஓஎச்சி ப்யூவல் இன்ஜெக்சன் (DOHC FI) வசதிக் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 40 பிஎச்பி மற்றும் 35 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடியது. இப்பைக்கில் மிக சிறந்த பயண அனுபவத்தை பெறுவதற்காக 43 மிமீ அப்-சைடு டவுண் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதே சஸ்பென்ஷனே முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதுபோல் இன்னும் பல அம்சங்கள் பழைய வெர்ஷனில் இருந்து புதிய வெர்ஷனுக்கும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

புதுப்பிக்கப்பட்ட டோமினார் 400 பைக்கின் அறிமுகம் பற்றி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் நாராயண் சுந்தரராமன் கூறியதாவது, "டோமினார் ரைடர்களுடனான தொடர்புகளின் அடிப்படையில், மோட்டார்சைக்கிளின் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்புதுப்பித்தல் சுற்றுப்பயணத்தை மிகுந்த உற்சாகமானதாக மாற்ற உதவும். இதுமட்டுமின்றி ரைடரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் புதுப்பித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

புதுப்பிக்கப்பட்ட Bajaj Dominar 400 பைக் விற்பனைக்கு அறிமுகம்! நிறைய அம்சங்களை வாரி வழங்கியிருக்காங்க!

பஜாஜ் நிறுவனம் மிக விரைவில் புதிய பல்சர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வரும் அக்டோபர் 28ம் தேதி புதிய பல்சரின் வெளியீடு அரங்கேற இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் ஓர் டீசர் வீடியோவை நிறுவனம் வெளியிட்டது. ஆனால், இப்போது வரை அது என்ன மாடல் என்பது பற்றிய தகவல் வெளியிடவில்லை. ஆகையால், மிகுந்த ஆர்வத்துடன் பல்சர் பிரியர்கள் வரும் 28ம் தேதி நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
Bajaj dominar 400 launched in india at rs 216648
Story first published: Monday, October 25, 2021, 18:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X