வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

பஜாஜ், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளை ஆன்லைனில் புக்கிங் செய்து வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

கடந்த ஓர் ஆண்டு காலமாக கொரோனா பிரச்னை காரணமாக, வாகனத் துறை பல சவால்களை சந்தித்து வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக, வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருவதை தவிர்த்து வருவதால், வர்த்தகத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை மனதில் வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வாகனங்களை புக்கிங் செய்து வீட்டிலேயே டெலிவிரி பெறும் வசதியை அறிமுகப்படுத்தின.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பைக்குகளை புக்கிங் செய்து வாங்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

பஜாஜ் பைக்குகள் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் கேடிஎம், ஹஸ்க்வர்னா ஆகிய நிறுவனங்களின் பைக்குகளையும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டெலிவிரி பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

இதற்காக, online.bajajauto.com என்ற பிரத்யேக இணையத் தள பக்கத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் பஜாஜ், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளை வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்து வாங்க முடியும்.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா நிறுவனங்களின் அனைத்து பைக் மாடல்களும் இந்த இணையதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. எக்ஸ்ஷோரூம் விலை விபரம், வண்ணத் தேர்வுகள், எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் எளிதாக தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

மேலும், குறிப்பிட்ட மாடலை தேர்வு செய்தபின் வாடிக்கையாளர்கள் தங்கள் ஊரில் அருகாமையிலுள்ள டீலரை தேர்வு பைக்கை டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

இந்த இணையதளத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அடுத்து, ஆன்லைன் மூலமாக பைக்கிற்கு உரிய தொகையை செலுத்துவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்

முதல்கட்டமாக சென்னை, புனே, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 5 நகரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்கள் இந்த பட்டியலில் இல்லை. எனினும், விரைவில் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இந்த ஆன்லைன் மூலமாக பஜாஜ், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Bajaj has introduced new website to buy Bajaj, KTM And Husqvarna bikes easily through online platform.
Story first published: Thursday, February 25, 2021, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X