பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்! வசதிகள் அதிகம், விலையோ குறைவு! எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

பஜாஜ் நிறுவனம் சிடி110எக்ஸ் எனும் புதுமுக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சிடி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களின் தேர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் இப்புதிய பைக்கை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

இது ஓர் உயர்நிலை வேரியண்ட் ஆகும். ஆகையால், கூடுதல் சிறப்பம்சங்களை இப்பைக்கில் நம்மால் காண முடிகின்றது. இருப்பினும், இந்த இருசக்கர வாகனத்திற்கு மிக குறைந்த விலையையே நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ரூ. 55,494 என்ற மலிவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து நிறுவனம் இப்பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் அதிக வசதி ஆகியவற்றை மனதில் கொண்டே சிடி110 எக்ஸ் பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

இத்துடன், அதிக லக்கேஜ்களை கையாளும் வகையில் கேரியர் அமைப்பு பைக்கின் பின் பக்கத்தில் நிறுவனம் கொடுத்துள்ளது. இது 7 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல உதவும். ஆகையால், டெலிவரி சேவையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்த பைக் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

தொடர்ந்து, பாதுகாப்பு வசதிக்காக அதிக அடர்த்தியான கிராஷ் குவார்ட்கள் மற்றும் மோல்டட் கால் வைப்பான்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, இரு நிறங்கள், இரட்டை தையல் இருக்கைக் கவர், நடுத்தர இரட்டை க்ராட்டில் ஃப்ரேம் மற்றும் அனைத்து சாலைகளையும் சமாளிக்கக் கூடிய டயர்கள் ஆகியவை இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

இத்தகைய கூடுதல் அம்சங்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான் இப்பைக்கை உயர்-நிலை வேரியண்ட் என பஜாஜ் குறிப்பிடுகின்றது. மேலே உள்ள அம்சங்கள் மட்டுமின்றி கூடுதலாக ரைடருக்கு அதிக கிரிப்பான அனுபவத்தை வழங்கும் ஃப்யூவர் டேங்க் ஓர் ரப்பர் பேட்டும், ஹேண்டில்பாரில் அதிக கிரிப்பான கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

எஞ்ஜினைப் பொருத்தவரை பஜாஜ் சிடி110 எக்ஸ் பைக்கில் 115சிசி திறன் கொண்ட டிடிஎஸ்-ஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 6.33kW பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 9.81 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

பஜாஜ் சிடி110எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... வசதிகள் அதிகம், விலையோ குறைவு... எவ்ளோ தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...

இந்த பைக்கின் ஒட்டுமொத்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 170மிமீ ஆகும். இதேபோன்று, இதன் வீல் பேஸ் 1285மிமீ நீளமாக உள்ளது. ஆகையால், இந்த பைக்கை கையாள்வது மிக சுலபம். அதேசமயம், இதன் அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ் அனைத்து விதமான சாலையைச் சமாளிக்க உதவும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Launches CT110X Bike In India With ‘Xtra Kadak’ Features. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X