அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது?

பஜாஜ் நிறுவனம் அதன் குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த அம்சம் குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

தினசரி மற்றும் மைலேஜ் மீது அதிக அக்கறைக் கொண்ட வாகன பிரியர்களின் முதல் நிலை தேடல்களில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக்கும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பைக்கை அதிக பாதுகாப்பு திறன்மிக்க இருசக்கர வாகனமாக பஜாஜ் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) எனும் வசதியையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக வழுப்பான சாலைகளில்கூட க்ரிப்பான பிரேக்கிங் திறனை பெற முடியும். வழு வழுப்பான சாலைகளில் சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் பிடித்தால், வாகனம் சருக்கிவிடும்.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

ஆனால், இந்த ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் இதுபோன்ற எந்தவிதமான சிக்கலையும் சந்திக்காது. குறிப்பாக, வாகனத்தைக் கட்டுக்குள் வைத்து நிலையான பிரேக்கிங்கை வழங்கும். எனவேதான் 150 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களில் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் பொருத்த வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருக்கின்றது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

இருப்பினும், தனது 115 சிசி திறன் கொண்ட பைக்கிலேயே பஜாஜ் ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அறிமுகத்தின் மூலம் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட பைக்காக பிளாட்டினா 110 பைக் மாறியிருக்கின்றது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளில் 115சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 6.33KW (8.6 பிஎஸ்) பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 9.81 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

ஏற்கனவே இந்த ஏபிஎஸ் வசதிக் கொண்ட பிளாட்டினா 110 பைக்கை டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை பஜாஜ் தொடங்கிவிட்டது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கின் புகைப்படங்கள் மிக சமீபத்தில் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வ அறிமுகத்தை பஜாஜ் இன்று செய்திருக்கின்றது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் வால்கானிக் சிவப்பு, சார்கோல் பிளாக் மற்றும் கடல் நீலம் ஆகிய மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக நைட்ராக்ஸின் ஸ்பிரிங்-ஆன்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

தொடர்ந்து, ட்யூப் லெஸ் டயர், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய ஹெட்லேம்ப், 20 சதவீதம் நீளமான இருக்கை, சற்று பரந்த அளவிலான கால் வைக்கும் ரப்பர் பேட்கள், ஏபிஎஸ் பற்றிய தகவலை வழங்கும் அனலாக் ஸ்பீடோ மீட்டர் என எக்கசக்க சிறப்பம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சத்தை அறிமுகம் செய்த பஜாஜ்... என்ன தெரியுமா?

இந்த புதிய வசதியுடைய பிளாட்டினா 110 பைக்கிற்கு ரூ. 65,920 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த குறைந்த விலையிலேயே அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை பஜாஜ் வழங்கியிருக்கின்றது. இத்துடன், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்க வீலில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இவை, திடீர் நிறுத்தத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Launches Platina 110-ABS The ‘Safest’ Bike In Its Segment. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X