Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 7 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரியாவிடை பெற்று சென்றது பல்சர் 180எஃப் பைக்!! மீண்டும் பல்சர் 180-இன் வருகையினால் பஜாஜ் அதிரடி நடவடிக்கை!
பிரபலமான பல்சர் 220எஃப் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 180எஃப் பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் 220எஃப் பைக்கிற்கு நிலவிவரும் வரவேற்பை பார்த்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கொண்டுவந்துள்ள பைக் மாடல் தான் பல்சர் 180எஃப் ஆகும். இதன் பிஎஸ்6 வெர்சன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.1.08 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுவந்த பிஎஸ்6 பல்சர் 180எஃப் பைக்கின் என்ஜின் அமைப்பில் வழக்கமான கார்புரேட்டர் யூனிட்டிற்கு மாற்றாக எலக்ட்ரானிக் ஃப்யுல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டது.

இவ்வாறு அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், பல்சர் 180எஃப் பைக்கின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பைக்கின் பெயர் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைக்கு பாதி பேனல்களால் நிரப்பப்பட்ட பல்சர் பைக்காக 220எஃப் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இதன் விற்பனை நிறுத்தத்திற்கு இதன் விலையை முக்கிய காரணமாக சொல்லலாம். பல்சர் 220எஃப் பைக்கிற்கு கிட்டத்தட்ட ரூ.1.50 லட்சத்தை (ஆன்-ரோடு விலை) செலுத்த தயாராக இருந்த வாடிக்கையாளர்கள் இந்த பைக்கிற்கு ரூ.1.35 லட்சத்தை செலுத்த சற்று யோசித்தனர் என்பதே உண்மை.

இதனால் இந்த 180சிசி பல்சர் பைக்கின் விற்பனை ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் இல்லை என்பதை கூறிதான் ஆக வேண்டும். இதுதான் கிட்டத்தட்ட 2 வருடங்களாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் 180 பைக்கை மீண்டும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவருவதற்கு உந்துதலாக இருந்துள்ளது.

பல்சர் 180எஃப் பைக்கில் அதிகப்பட்சமாக 16.8 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 178.6சிசி என்ஜின் வழங்கப்பட்டது. புதிய பல்சர் 180 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ள இந்த என்ஜின் அதன் பிஎஸ்4 வெர்சனிலும் மேற்கூறப்பட்ட அளவிலான ஆற்றல்களை தான் வெளிப்படுத்தியது.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக், உராய்வை தடுக்கும் புஷ் அமைப்பும், பின்பக்கத்தில் 5 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நைட்ராக்ஸ் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டன.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 260மிமீ மற்றும் 230மிமீ-களில் டிஸ்க்குகள் வழங்கப்பட்டு வந்தன. கருப்பு- சிவப்பு மற்றும் நியான் ஆரஞ்ச் நிறங்களில் விற்பனைக்கு கிடைத்த பல்சர் 180எஃப் பைக், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்த ஆற்றல்மிக்க பைக்குகளுள் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது.