புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய 250சிசி பல்சர் பைக்குகளை பற்றிய விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் வெற்றிக்கரமான தயாரிப்பு மாடல் பல்சர் என்றால் அதில் மிகையில்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக 2-வீலர்ஸ் பிரிவில் பஜாஜ் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளாக பல்சர் பைக்குகள் விளங்குகின்றன.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

புதிய பல்சர் 250 பைக்குகளின் வருகைக்கு முன்பு வரையில் 125சிசி, 150சிசி, என்எஸ் மற்றும் ஆர்எஸ் வரிசைகளில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதிகப்பட்சமாக 220சிசி வரையில் பல்சர் பைக்கை வாங்க முடிந்தது. தற்போது இந்த புதிய அறிமுகத்தால் இனி 250சிசி-யிலும் பஜாஜ் பல்சர் பைக்கை வாங்கலாம்.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

இதன் மூலமாக பல்சர் வரிசையில் முதன்மையான மாடலாக விளங்கவுள்ள புதிய 250சிசி பல்சர் பைக் இரு விதமான வெர்சன்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததை போல் என்250 & எஃப்250 என்ற இரு வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் என்250 ஆனது என்எஸ்200 பைக்கை போல் நாக்டு வெர்சனாகும். எஃப்250, சற்று கூடுதல் பேனல்களுடன் காட்சியளிக்கிறது.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

இவற்றை வடிவமைக்கும் பணியில் கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஈடுப்பட்டு வந்ததாக இந்த அறிமுக நிகழ்ச்சியில் ராஜிவ் பஜாஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், மற்ற வாகன உற்பத்தியாளர்கள் தோல்வியுற்ற தயாரிப்புகளை மறுபரிசீலனை செய்வதிலும், அழகு சாதன புதுப்பிப்புகளை வழங்குவதிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் வெற்றிக்கரமான தயாரிப்பை மாற்றுவதில்லை என கூறியவர், ஆனால் பஜாஜ் புதிய பல்சருடன் ஒரு புரட்சிகர வேலையை செய்ய விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

250சிசி பல்சர் பைக்கை 3 வருடங்களுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுளது. ஆனால் இடையில் கேடிஎம் & ஹஸ்க்வர்னா நிறுவனங்களுக்காக பணியாற்ற துவங்கியதால் இதன் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டதாகவும் ராஜிவ் பஜாஜ் கூறியுள்ளார். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் உடன் கிட்டத்தட்ட 15 வருடங்களாக கூட்டணியில் உள்ளது. ஆனால் ஹஸ்க்வர்னா பைக்குகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

புதிய 250சிசி பல்சர் பைக்குகள் புதிய என்ஜின் & புதிய ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தற்கால வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப புதிய ஃப்ரேம், மற்றும் புதிய முன்பக்கத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் வழங்க முடிந்துள்ளது. புதிய பல்சர் என்250 பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.38 லட்சமாகவும், எஃப்250 பைக்கின் விலை ரூ.1.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

பல்சர் என்250 பைக் ஒரே ஒரு டெக்னோ க்ரே நிறத்தில் மட்டும் தான் தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எஃப்250 பைக்கை ரேசிங் சிவப்பு நிறத்திலும் வாங்கலாம். அதாவது இந்த ஸ்போர்ட்ஸ் ரக பைக்கிற்கு டெக்னோ க்ரே நிறத்துடன் ரேசிங் சிவப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகங்கள் நிச்சயம் யமஹா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு தலைவலியாக அமையும்.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

ஏனெனில் 250சிசி பைக்குகள் வரிசையில் இவை இரண்டின் எஃப்.இசட்25 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப் 250 மோட்டார்சைக்கிள்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் பஜாஜ் டோமினார் பிராண்டிலும் டோமினார் 250 என்ற 250சிசி பைக் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பல்சர் 250 பைக்குகள் இரண்டிலும் ஒரே மாதிரியான 4-ஸ்ட்ரோக் ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

அதிகப்பட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இவற்றில் ப்ரேக்கிங் பணியினை கவனிக்க 300மிமீ மற்றும் 230மிமீ-களில் டிஸ்க் ப்ரேக்குகள் முன் மற்றும் பின் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை இரண்டிலும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. டபுள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படவில்லை.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

இது சிலருக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம். இவை இரண்டிலும் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் உடன் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் முன்பக்கத்தில் ரிவர்ஸ்-பூமராங் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி பிரோஜெக்டர் யூனிபோட் ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் என்250 & எஃப்250 பைக்குகள் அறிமுகம்!! ரூ.1.38 லட்சத்தில் இருந்து விலைகள் துவக்கம்!

இதனுடன் கூடுதல் சவுகரியத்திற்காக பிளவுப்பட்ட வடிவில் இருக்கை அமைப்பு, இரட்டை-பேரல் எக்ஸாஸ்ட் மஃப்லர் உள்ளிட்டவற்றையும் இந்த புதிய 250சிசி பல்சர் பைக்குகள் பெற்று வந்துள்ளன. இதில் எக்ஸாஸ்ட் அமைப்பின் இரட்டை-பேரல் யூனிட்டை பஜாஜ் டோமினார் 400 & 250 பைக்குகளில் பார்க்க முடியும். இவற்றின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் இல்லை. விலையை கருத்தில் கொண்டு இந்த வசதியினை பஜாஜ் நிறுவனம் வழங்காமல் இருந்திருக்கலாம்.

Most Read Articles

English summary
Bajaj Pulsar 250 Launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X