பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பாக 250சிசி பல்சர் பைக்குகள் கடந்த அக்.28ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள இந்த புதிய பல்சர் பைக்குகளின் சிறப்பம்சமே அவற்றின் விலைகள் தான்.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

பல்சர் என்250-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.38 லட்சமாகவும், எஃப்250 பைக்கின் விலை ரூ.1.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு விற்பனையில் போட்டியளிக்க பல முன்னணி பிராண்ட்களின் மாடல்கள் தயாராக உள்ளன. அதேநேரம் இவற்றிற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மற்றொரு 250சிசி மோட்டார்சைக்கிளான டோமினார் 250-யும் போடியாக உள்ளது. இவை இரண்டிற்கு இடையேயான வேறுபாடுகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

ஸ்டைல்

சந்தைக்கு, பஜாஜ் டோமினார் பிராண்டின் டோமினார் 250 பைக்கும் புதியதே. ஏனெனில், டோமினார் 400 மோட்டார்சைக்கிள் கடந்த சில வருடங்களாக விற்பனையில் இருக்கும் நிலையில், அதன் சிறிய-அளவு என்ஜினை கொண்ட வெர்சனாக டோமினார் 250 கடந்த 2020ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இந்த டோமினார் மாடலின் ஸ்டைலும் தற்போதைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

பல்சர் 250 பைக்குகளை பொறுத்தவரையில், என்250 நாக்டு மோட்டார்சைக்கிளாகவும், எஃப்250 செமி-ஸ்போர்ட்ஸ் பைக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்சர் பைக்குகளின் அடையாளமே, பெட்ரோல் டேங்கில் இருந்து பின்பக்கம் வரையில் வழங்கப்படும் கூர்மையான லைன்களும், பின்பக்க இரு-கோடு டிசைனிலான டெயில்லேம்ப்களுமே ஆகும். இவை அப்படியே இந்த புதிய 250சிசி பைக்குகளிலும் தொடரப்பட்டுள்ளன.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

காற்றியக்கவியல் பண்பு & ஹேண்ட்லிங்

பல்சர் 250 பைக்குகளில் என்250 ஆனது அதிக வளைவுகளை கொண்ட நகர்புற சாலைகளுக்கு ஏற்றதாகவும், எஃப்250 தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக எஃப்250 பைக்கில் முன்பக்கத்தில் கூடுதல் பேனல்களுடன் காற்றியக்கவியல் பண்பு மிகவும் மேம்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

அப்படியே டோமினார் 250 பக்கம் சென்றால், இந்த பைக்கை குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான வாகனமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிலைநிறுத்தவில்லை. அதாவது டோமினார் 250-ஐ நகர்புற சாலைகளில் அதிகளவில் பயன்படுத்துவது மட்டுமின்றி, தொலைத்தூர பயணமாக நெடுஞ்சாலைகளுக்கும் தாராளமாக எடுத்து செல்லலாம்.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

தொழிற்நுட்ப வசதிகள்

தற்போதைய பஜாஜ் 2-வீலர் வாகனங்களில் உள்ள ஒரே குறைப்பாடு, அவற்றின் மாடர்ன் தொழிற்நுட்பங்கள் போதாமை ஆகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்சர் 250 பைக்குகளில் ப்ளூடூத் இணைப்பு போன்ற அதிநவீன வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இம்முறையும் பஜாஜ் நிறுவனம் நம்மை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்த பல்சர் பைக்குகளையும் புதிய தலைமுறைக்கு அப்கிரேட் செய்ய தயாராகி வருகிறது. பார்ப்போம், அப்போதாவது மாடர்ன் தொழிற்நுட்பங்கள் வாரி வழங்கப்படுமா என்பதை. இந்த சமீபத்திய அறிமுகங்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்த டோமினார் 250-ஐ பற்றி சொல்லவா வேண்டும். இவை அனைத்திலும் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மிகவும் அடிப்படையானதாகவே உள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

என்ஜின் & மெக்கானிக்கல் பாகங்கள்

பல்சர் 250 & டோமினார் 250 இரண்டும் ஒரே பஜாஜ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படுவதால், இவற்றில் ஒரே மாதிரியான 250சிசி என்ஜின் தான் பொருத்தப்படுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது தவறு. ஏனெனில் டோமினார் 250-இல் 248.8 சிங்கிள் சிலிண்டர், 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 26.63 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

மறுப்பக்கம் என்250 & எஃப்250 என்ற பல்சர் 250 பைக்குகளில் 249.07சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8,750 ஆர்பிஎம்-இல் 24.1 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. அதேபோல் இவற்றில் வழங்கப்படும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வித்தியாசப்படுகின்றன. டோமினார் மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட, பல்சர் 250 பைக்குகளில் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

விலைகள்

ஏற்கனவே கூறியதுதான், பல்சர் என்250 பைக்கின் அறிமுக விலையாக ரூ.1.38 லட்சமும், எஃப்250-இன் விலையாக ரூ.1.40 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் டோமினார் 250-இன் கை ஓங்கியுள்ளது. ஏனெனில் முன்னதாக ரூ.1.71 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த டோமினார் 250-இன் விலை கடந்த ஜூலை மாதத்தில் ஒரேடியாக ரூ.17,000 குறைக்கப்பட்டது.

பஜாஜின் எந்த 250சிசி பைக்கை தேர்வு செய்யலாம்? பல்சர் 250-ஆ (அ) டோமினார் 250? உங்களது சாய்ஸ் எது?

இதனால் தற்சமயம் இந்த டோமினார் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஹோரூம் விலை ரூ.1.54 லட்சம் என்ற அளவில் உள்ளது. கொரோனா வைரஸினால் ஏற்பட்ட இழப்பை ஈடுச்செய்ய மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்திவந்த சூழ்நிலையில் டோமினார் 250-இன் விலையில் சுமார் ரூ.17,000 குறைப்பை பஜாஜ் கொண்டுவந்தது அந்த சமயத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 250 vs Dominar 250 - Which Is Better?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X