பல்சர் பைக்குகளின் பெயர்களை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

2021 பல்சர் பைக்குகளின் தற்போதைய விலைகளின் லிஸ்ட் புதிய பல்சர் 180 பைக்கின் விலை உடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த வருடத்தை அதன் அனைத்து பைக்குகளின் விலை அதிகரிப்புடன் துவங்கியது. அதன்பின் இந்த நிறுவனத்தின் பல்சர் பைக்குகளின் வரிசை புதிய பல்சர் 180 உடன் விரிவுப்படுத்தப்பட்டது.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விற்பனை நிறுத்தப்பட்டு இருந்த இந்த 180சிசி பல்சர் பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.08 லட்சம் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. தற்சமயம் பஜாஜ் விற்பனை செய்யும் பல்சர் பைக்குகளின் விலைகள் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் இதோ...

Bajaj Pulsar Price (Ex-showroom Delhi)
125 Neon ₹71,616
125 Neon Split Seat Drum ₹74,298
125 Neon Disc ₹77,946
125 Neon Split Seat Disc ₹81,242
150 Neon ₹94,125
150 ₹1,01,082
150 Twin Disc ₹1,04,979
180 ₹1,07,904
180F ₹1,14,515
220F ₹1,25,248
NS160 ₹1,10,086
NS200 ₹1,33,222
RS200 ₹1,52,179
பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

ஆரம்ப நிலை பல்சர் பைக்கான பல்சர் 125 பைக் நியோன், பிளவுப்பட்ட இருக்கை உடன் ட்ரம் & டிஸ்க் மற்றும் ஒற்றை-துண்டு இருக்கை உடன் டிஸ்க் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் ரூ.71,616-ல் இருந்து 81,242 வரையில் உள்ளன.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

அதற்கடுத்த பல்சர் 150 பைக்குகளின் விலைகள் ரூ.94,125ல் இருந்து ரூ.1.05 லட்சம் வரையில் உள்ளன. இது நியோன், ஸ்டாண்டர்ட் மற்றும் இரட்டை டிஸ்க் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

இவற்றிற்கு அடுத்துதான் அதிக சிசி கொண்ட பல்சர் பைக்காக பல்சர் 180 ரூ.1.08 லட்சம் என்ற ஆரம்ப விலை உடன் உள்ளது. பிரபலமான பல்சர் 220எஃப் பைக்கின் தோற்றத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட பல்சர் 180எஃப் பைக்கும் விற்பனையில் உள்ளது.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

இதன் விலை பல்சர் 180-ஐ காட்டிலும் சற்று அதிகமாக ரூ.1.14 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் பேராதரவில் விற்பனையில் ஜொலித்துவரும் பல்சர் 220எஃப் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாகும்.

பல்சர் பைக்குகளின் விலைகளை அப்டேட் செய்தது பஜாஜ்!! முழு விபரம் இதோ...

இவை தவிர்த்து பல்சர் என்எஸ்160 பைக்கின் விலை ரூ.1.10 லட்சமாகவும், என்எஸ்200 பைக்கின் விலை ரூ.1,33,222 ஆகவும் உள்ளன. 200சிசி-யில் ஸ்போர்ட்ஸ் பைக் ரகமான ஆர்எஸ்-ஸிலும் பல்சர் பைக் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதன் விலை மற்ற அனைத்து பல்சர் பைக்குகளை காட்டிலும் அதிகமாக ரூ.1,52,179 ஆக உள்ளது.

Most Read Articles

English summary
2021 Bajaj Pulsar Range Updated Price List, March 2021.
Story first published: Monday, March 1, 2021, 18:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X