புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக்கின் அம்சங்களை விளக்கும் வீடியோ முதல்முறையாக வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அதன் பல்சர் பைக்குகளின் வரிசையை புதிய என்எஸ்125 பைக்கின் மூலம் சமீபத்தில் விரிவுப்படுத்தியது. புதிய என்எஸ்125 பைக்கின் விலை ரூ.93,690 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

விற்பனையில் உள்ள பல்சர் 125 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்த புதிய 125சிசி பல்சர் பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் அதிகமாகும். ஆனால் அதேநேரம் என்எஸ்125 கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் 125 பைக்கை காட்டிலும் சுமார் 60 ஆயிர ரூபாய் அளவில் குறைவு.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

பீச் ப்ளூ, ஆரஞ்ச், சிவப்பு மற்றும் க்ரே என்ற நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள புதிய என்எஸ்125 பைக் அனைத்து நிறத்தேர்விலும் அதிக பளபளப்பான மெட்டாலிக் பெயிண்ட்டால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

அலாய் சக்கரங்கள் வெண்கல நிறத்தில் உள்ளன. பல்சர் என்எஸ்125 பைக்கில் விரைப்பிற்காகவும், சிறந்த ஹேண்ட்லிங்கிற்காகவும், இறுக்கமான ஃப்ரேம் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

அதேபோல் வெவ்வேறான வேகங்களின் போதும், ஆஃப்-ரோடு பயணங்களின் போதும் சிறந்த நிலைத்தன்மைக்காக இந்த பைக்கில் நைட்ரக்ஸ் மோனோ-ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய பல்சர் என்எஸ்125 பைக்கில் ஓநாயின் கண் வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பு, இரட்டை ஸ்ட்ரிப் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கு பிளவுப்பட்ட வடிவில் பைக்கின் இறுதிமுனையில் பிடிப்பான் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன.

Image Courtesy: Biker Prakash Choudhary

இவை அனைத்தையும் பைக்கர் பிரகாஷ் சௌத்ரி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவில் பார்க்கலாம். வழக்கமான பல்சர் 125 பைக்கை காட்டிலும் இந்த புதிய பல்சர் என்எஸ் பைக் கிட்டத்தட்ட 4 கிலோ அதிகமாகும்.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

பைக்கின் நீளம் மற்றும் அகலம் 2,012மிமீ & 810மிமீ என உள்ளன. தரையில் இருந்து பைக்கின் உயரம் 1,353மிமீ ஆகும். இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் முன்பக்கத்தில் 80 பிரிவு டயரும், பின்பக்கத்தில் 100 பிரிவு டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

பல்சர் 125 பைக்கில் வழங்கப்படும் அதே 125சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு, ஃப்யுல் இன்ஜெக்டட் டிடிஎஸ்-ஐ என்ஜின் தான் இந்த புதிய பைக்கிலும் 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கில் சஸ்பென்ஷன் பணியை கவனிக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க் & மோனோ ஷாக் செட்அப் உள்ளன.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...

ப்ரேக்கிற்கு முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம் ப்ரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. பஜாஜ் பல்சர் என்எஸ் வரிசையில் ஏற்கனவே 200சிசி-யில், 160சிசி-யில் மோட்டார்சைக்கிள்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Bajaj Pulsar NS 125 First Look Walkaround And Exhaust Note. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X