டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

புதிய மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிறங்களில் பஜாஜ் டோமினார் 250 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

பல்சர் பைக்குகளுக்கு புதிய நிறத்தேர்வுகளை வழங்கியதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அதன் 1/4-லிட்டர் மோட்டார்சைக்கிளான டோமினார் 250-இல் புதிய பெயிண்ட் தேர்வுகளை வழங்க தயாராகி வருகிறது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

இதன்படி மஞ்சள், ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிறங்கள் பஜாஜ் டோமினார் 250 பைக்கிற்கு வழங்கப்பட உள்ளன. காடிவாடி செய்தி தளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் இந்த மூன்று நிறத்தேர்வுகளிலும் தலா மூன்று விதமான நிறங்களில் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

அதாவது மஞ்சள் நிறத்தேர்வில், பைக் மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் காட்சியளிக்கிறது. இதில் வெள்ளை நிறம் என்ஜின் அமைப்பிற்கு மேற்பகுதிகளிலும், சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் சக்கரங்கள் பஜாஜ் பல்சர் என்எஸ் மற்றும் ஆர்எஸ் பைக்குகளில் தான் இதுவரை வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

மற்றப்படி டோமினார் 250 பைக்கின் அலாய் சக்கரங்களின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. இதே டிசைனிலான சக்கரங்கள் தான் சமீபத்தில் அறிமுகப்படுத்த பல்சர் என்எஸ்125 பைக்கிலும் வழங்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதேநேரம் டோமினார் 250-இன் வெள்ளை நிற சக்கரங்களின் ரிம்களில் மஞ்சள் நிறத்தை பார்க்க முடிகிறது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

இதனுடன் மஞ்சள் நிறம் முன் மட்கார்டு, ஹெட்லைட் பேனலில், என்ஜின் பாதுகாப்பான், பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்கள் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ளன. ஆரஞ்ச் நிறத்தேர்வை பொறுத்தவரையில், மஞ்சள் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் ஆரஞ்ச் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

மூன்றாவது நிறத்தேர்வான கருப்பில், என்ஜினிற்கு வழங்கப்படும் கருப்பு நிறத்தை காட்டிலும் சற்று பளபளப்பான கருப்பு நிறம், மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிறங்களுக்கு மாற்றாக உள்ளது. உண்மையில் இவை மூன்றிலும் பஜாஜ் டோமினார் 250 பைக் அருமையாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

இந்த புதிய மூன்று நிறத்தேர்வுகளை மேட் சில்வர் உடன் சிட்ரஸ் ரஷ், மேட் சில்வர் உடன் ஸ்பார்க்லிங் கருப்பு மற்றும் மேட் சில்வர் உடன் ரேசிங் சிவப்பு என பஜாஜ் நிறுவனம் அழைக்கிறது. மூன்று புதிய நிறங்களுடன், வழக்கமான கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களிலும் டோமினார் 250 தொடர்ந்து கிடைக்கவுள்ளது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

இந்த டோமினார் பைக்கின் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய நிறத்தேர்வுகளை இந்த 250சிசி பைக்கில் புனேவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இவை நிச்சயம் கூடுதல் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

டோமினார் 250 பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.17,000 குறைக்கப்பட்டதற்கு சரியாக ஒரு மாதம் கழித்து இந்த மூன்று புதிய நிறத்தேர்வுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த விலை குறைப்பினால் முன்பு ரூ.1.71 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த டோமினார் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.54 லட்சமாக உள்ளது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

இந்த புதிய பெயிண்ட் தேர்வுகளினால் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த 3 புதிய நிறங்களில் டோமினார் 250 பைக்கின் விலை எவ்வளவு என்பதை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் விலை சற்று உயர்த்தப்படலாம்.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

புதிய பெயிண்ட் தேர்வுகளை தவிர்த்து பைக்கின் இயந்திர பாகங்கள் எதிலும் கை வைக்கப்பட்டிருக்காது. கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டோமினார் 250 பைக்கில் சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, டிஒஎச்சி, 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது.

டோமினார் 250 பைக்கிற்கு 3 புதிய நிறத்தேர்வுகளை வழங்கியுள்ள பஜாஜ்!! உங்களது தேர்வு எது?

அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 26.6 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பு இணைக்கப்படுகிறது. இவற்றுடன் இரட்டை-சேனல் ஏபிஎஸ்-ஐயும் இந்த டோமினார் பைக் பெறுகிறது.

Most Read Articles

English summary
Bajaj ready to introduced three new colour options for the dominar 250
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X