லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

பஜாஜ் நிறுவனத்தின் 2021 மே மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

உலகமே கொடிய வைரஸ் கொரோனாவிடம் சிக்கி தவித்து வருகின்றது. இதனால், கடந்த ஆண்டு தொடங்கி நடப்பாண்டு வரை வாகன உற்பத்தி நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வருகின்றன. குறிப்பாக, விற்பனை சரிவு நிறுவனங்களை வாட்டி வதைக்க ஆரம்பித்திருக்கின்றன.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

முழு ஊரடங்கு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலவி வருவதன் காரணத்தினால் விற்பனை மட்டுமல்ல வாகனங்களை உற்பத்திகூட செய்ய முடியாத நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் 113 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

2021 மே மாதத்தில் பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் 60,342 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. 2020 மே மாதத்துடன் இந்த விற்பனையை ஒப்பிட்டால் இது 54 சதவீத அதிக விற்பனையாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 39,286 யூனிட்டுகள் வரை மட்டுமே பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

இதேபோன்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பஜாஜ் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து காணப்படுகின்றது. 1,80,212 யூனிட் வரை நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. அதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் பார்த்தோமேயானால் நிறுவனம் 73,512 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

இது 145 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். அதுவே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டையும் சேர்த்து ஒப்பிட்டு பார்த்தால் 113 சதவீத விற்பனை வளர்ச்சியாக இருக்கின்றது. அதேசமயம், நிறுவனத்தின் விற்பனையான 2,40,554 யூனிட் விற்பனையானது இந்திய இருசக்கர வாகன சந்தைக்கே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

2020 மே மாதம் இது 1,12,798 யூனிட்டுகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகன பிரிவில் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருக்கும் பஜாஜ் வர்த்த வாகன பிரிவில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றது. நிறுவனம் 38 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

2020 மே மாதத்தில் 788 யூனிட் வரை நிறுவனம் வர்த்தக வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. ஆனால், 2021 மே மாதத்திலோ வெறும் 488 யூனிட் வரை மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. அதேசமயம், வெளிநாடுகளிக்கு 30,820 வாகனங்களை நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

லாக்டவுண் காலத்திலும் விற்பனையில் கெத்து காட்டிய பஜாஜ்... மிரண்டு நிற்கும் இந்திய இருசக்கர வாகன உலகம்...

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 128 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மே மாதத்தில் 13,542 யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. இந்த ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியும் இந்திய இருசக்கர வாகன சந்தைக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Bajaj Records 113 Percent Sales Growth in 2021 May. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X