சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில முக்கிய மாநகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் பஜாஜ் சேத்தக்கின் முன்பதிவுகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

சமீபத்தில் சேத்தக்கின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் இந்த இ-ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமானது.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

ஆனால் இனி கவலை வேண்டாம், ஏனெனில் புனே மற்றும் பெங்களூரில் சேத்தக்கிற்கான முன்பதிவுகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. உண்மையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எதிர்பார்த்ததை காட்டிலும் சேத்தக்கிற்கு வரவேற்பு குவிந்துள்ளது.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

1980, 90களில் விற்பனையில் இருந்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களை போன்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நியோ-ரெட்ரோ ஸ்டைல் தோற்றம் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கடுத்து ஸ்கூட்டரின் 12-இன்ச் சக்கரங்கள் மற்றும் முன்பக்க சஸ்பென்ஷன் செட்அப் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

ஸ்டைலிஷான ஒற்றை-பக்க ஸ்விங்கார்மை பின்பக்கத்தில் பெறுகின்ற சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.0kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. 4.08 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், இந்த பேட்டரி தொகுப்பின் ஆற்றல் மூலம் 16 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெறுகிறது.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக 95கிமீ தொலைவிற்கு செல்லலாம் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவே ஸ்போர்ட் மோடில் கூடுதல் வேகம் கிடைக்கும் என்பதால், ரேஞ்ச் கிட்டத்தட்ட 10கிமீ குறைகிறது.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

அர்பன் & பிரீமியம் என்கிற இரு வேரியண்ட்களில் சேத்தக் இ-ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,42,988 மற்றும் ரூ.1.44,987 ஆக தற்சமயம் உள்ளன.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

ஃபேம் 2 மானியம் பெறுவதற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக பஜாஜ் சேத்தக் ஏற்ற கொள்ளப்படவில்லை. இதனால் தான் இந்த பஜாஜ் இ-ஸ்கூட்டரை காட்டிலும் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐக்யுப் மலிவானவைகளாக உள்ளன.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிடுபவர்களுக்கு சேத்தக்கை பார்த்தவுடனே பிடித்து போய்விடும். ஆனால் அதன் ரூ.1.42 லட்சம் என்கிற விலை தான் பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் இதன் முன்பதிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவர்கள் ஏராளம்.

சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்!! பெங்களூர் & புனேவில்

இந்த ஜூலை மாதத்தில் தான் நாக்பூரில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. சேத்தக்கை சென்னை மற்றும் ஹைதராபாத்திலும் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக பஜாஜ் அறிவித்திருந்தது. ஆனால் அதன்பின் எந்த தகவலும் இல்லை.

Most Read Articles
English summary
Bookings for the Bajaj Chetak have been reopened. Bajaj has re-opened bookings for its electric scooter, the Chetak in Pune and Bengaluru. This comes just after bookings for the Bajaj Chetak were closed recently due to high demand for the scooter in Tier 1 cities of India.
Story first published: Friday, July 30, 2021, 2:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X