ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா 110 பைக்கில் ஏபிஎஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் பிளாட்டினாவும் ஒன்று. இந்த பெயரில் பல விதமான தேர்வுகளை பஜாஜ் வழங்கி வருகின்றது. அந்தவகையில், பிளாட்டினா 110 எனும் மாடலை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த தேர்விலேயே புதிதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை பஜாஜ் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

தினசரி இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் அதிக மைலேஜை விரும்புவோர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் பைக்காக பிளாட்டினா இருக்கின்றது. இப்பைக்கை அதிக பாதுகாப்பு நிறைந்ததாக மாற்றும் வகையில் ஏபிஎஸ் சிஸ்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

இந்த அம்சம் சிறந்த பிரேக்கிங்கை உறுதி செய்ய உதவும். அதாவது, வழு வழுப்பான சாலையில்கூட மிக இருக்கமான பிரேக்கிங் வசதியை இந்த ஏபிஎஸ் வழங்கும். எனவேதான் இதனை அதிக 125க்கும் அதிகமான சிசி திறன் கொண்ட வாகனங்களில் கட்டாயப்படுத்தியிருக்கின்றது இந்திய அரசு.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

Source: Team BHP

இருப்பினும், 110 சிசி திறன் கொண்ட பைக்கிலேயே இவ்வசதியினை பஜாஜ் வழங்கியிருக்கின்றது. சிபிஎஸ் மட்டுமின்றி இப்பைக்கில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது முன் பக்க வீலில் இடம்பெற்றிருக்கின்றது. பின் பக்க வீலில் டிரம் பிரேக்கே இடம் பிடித்திருக்கின்றது.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

2021 பஜாஜ் பிளாட்டினா 110 பைக் ரூ. 59,859 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த குறைந்த விலையிலேயே பகல்நேர எல்இடி மின் விளக்கு, க்வில்ட் ஸ்டிட்ச்ட் சீட், பெரிய ரப்பர் கால் வைப்பாண்கள் மற்றும் டேங்க் பேட் ஆகியவற்றை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

இதுமட்டுமின்றி மறு சீரமைக்கப்பட்ட வடிவத்திலான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் வண்ணப்பூச்சிலான அலாய் வீல்களும் இப்பைக்கில் இடம்பிடித்திருக்கின்றன. பிளாட்டினா 110 பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன்பக்கத்தில் 135 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 110 மிமீ அளவுள்ள நைட்ரோக்ஸ் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆஹா, பிளாட்டினா 110 பைக்கில் இப்படி ஒரு அம்சமா... வழு வழுப்பான சாலையில்கூட பயமில்லாமல் போகலாம்!!

எஞ்ஜினைப் பொருத்தவரை பிளாட்டினா 110 பைக்கில் 102சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு டிடிஎஸ்-ஐ எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.8 பிஎச்பியை 7,500 ஆர்பிஎம்மிலும், 8.3 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இது 4 ஸ்பீடு வேகக்கட்டுப்பாடுக் கொண்ட கியர்பாக்ஸ் ஆகும்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Silently Launched Platina 110 With Single-Channel ABS. Read In Tamil.
Story first published: Monday, March 1, 2021, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X