பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

பஜாஜ் பல்சர் 250 மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரி பணிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள படங்களையும், இந்த 250சிசி பல்சர் பைக்குகளையும் பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

பஜாஜ் பல்சர் பிராண்டின் பெரிய அளவிலான மோட்டார்சைக்கிள்களாக எஃப்250 & என்250 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பலரது கவனத்தை பெற்று வருகின்றன. இந்திய சந்தையில் கடந்த 2021 அக்டோபர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவற்றின் ஆரம்ப விலையாக ரூ.1.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

250சிசி என்ஜினை கொண்ட பைக்கிற்கு இவ்வளவு குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது தான் பலரை ஈர்த்துள்ளது. ரூ.1.38 லட்சம் என்பது நாக்டு வெர்சனான என்250 பைக்கின் விலையாகும். பல்சர் எஃப்250-இன் விலை ரூ.1.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

இத்தகைய மலிவான 250சிசி பைக்குகளின் டெலிவிரி பணிகள் தான் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. புனேவில் முதல் வாடிக்கையாளர் பல்சர் எஃப்250 பைக்கை டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாஜ் ஆட்டோ கடந்த மாதம் அறிமுகப்படுத்திய முற்றிலும் புதிய பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரியை துவங்கியுள்ளது.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

புனேவில் நவ.15, 2021 அன்று சின்ச்வாடில் உள்ள ஷௌர்யா பஜாஜ் ஷோரூமில் இருந்து பல்சர் எஃப்250-இன் முதல் டெலிவிரி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்சர் எஃப்250 பைக்கை டெலிவிரி பெற்றிருக்கும் நபர் இதற்குமுன் பல்சர் 220எஃப் பைக்கை பயன்படுத்தி வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

டிசைனில் பல்சர் என்250 & எஃப்250 கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், ரைடிங் ஸ்டைல் மற்றும் காற்று இயக்கவியல் பண்புகளில் இரண்டும் வேறுப்படுகின்றன. ஏனெனில் எஃப்250 மினி-ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் என்பதால் இதன் முன்பக்கத்தில் காற்றியக்கவியலுக்கு இணக்கமான பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

ஆனால் இவை என்250 பைக்கில் இல்லை. இவை இரண்டிலும் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவை குழாய் ஃப்ரேம் வேலைப்பாடுகளையும், 300மிமீ & 230மிமீ-களில் முன் & பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ஐயும் பகிர்ந்து கொண்டுள்ளன.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

இவற்றின் பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்ளளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி தொழிற்நுட்ப அம்சங்களில் இந்த 250சிசி பல்சர் பைக்குகள் மிகவும் மாடர்னாக இல்லை. இதன் மூலமாகவே இவற்றை குறைவான விலையில் பஜாஜ் நிறுவனத்தால் கொண்டுவர முடிந்துள்ளது. இவை இரண்டிலும் 'முடிவிலா திரை' இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

இது கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருள் அளவு, ரேஞ்ச் இண்டிகேட்டர் மற்றும் நேரம் போன்ற அடிப்படை விபரங்களை வெளிக்காட்டக்கூடியதாகவே விளங்குகிறது. இருப்பினும் பல்சர் 250 பைக்குகளில் மொபைல் போன் யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் பிளவுப்பட்ட இருக்கைகள், எல்இடி டெயில்லேம்ப் மற்றும் பல-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

சந்தையில் பல்சர் என்250 நாக்டு பைக்கிற்கு சுஸுகி ஜிக்ஸெர் 250 முக்கியமான போட்டியாக விளங்குகிறது. அதேநேரம் விலையின் அடிப்படையில் பார்த்தோமேயானால், யமஹா எஃப்.இசட் 25 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. எஃப்250 பைக்கிற்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

இருப்பினும் விலையில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்கலாம். பல்சர் என்250 & எஃப்250 பைக்குகளில் பிஎஸ்6க்கு இணக்கமான 249.07சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், எஸ்ஒஎச்சி, 2 வால்வு, ஆயில் கூல்டு, ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 21.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், உதவி & ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணக்கப்படுகிறது. சஸ்பென்ஷன் அமைப்பாக பல்சர் 250-இல் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்தில் வழங்கப்படுகின்றன.

பல்சர் 250 பைக்குகளின் டெலிவிரி ஆரம்பமாகியது!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!

பல்சர் எஃப்250 & என்250 மோட்டார்சைக்கிள்கள் இரண்டிலும் டெக்னோ க்ரே நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுவே, எஃப்250 பைக்கிற்கு கூடுதலாக ரேசிங் சிவப்பு நிறத்தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கெர்ப் எடையை பொறுத்தவரையில், கூடுதல் பேனல்களினால் எஃப்250 2 கிலோ அதிகமாக உள்ளது. என்250-இன் கெர்ப் எடை 162 கிலோ ஆகும்.

Most Read Articles
English summary
Bajaj started the deliveries of the newly launched pulsar f250 n250 models
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X