உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டி! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

இந்தியாவில் பெனெல்லி 502சி பைக் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

பெனெல்லி நிறுவனத்தின் 502 சி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 4.98 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒற்றை தேர்வில் மட்டுமே இப்பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. ரூ. 10,000 என்ற முன் தொகையில் நடப்பு மாதத்தின் ஆரம்பத்திலேயே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. இந்த பைக் ஒரே ஒரு தேர்வில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், நிறத்தில் இரு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

அந்தவகையில், மேட் காக்னாக் சிவப்பு மற்றும் மேட் கருப்பு ஆகிய நிற தேர்வில் பெனெல்லி 502சி விற்பனைக்குக் கிடைக்கும். இது ஓர் அதி-திறன் வாய்ந்த க்ரூஸர் ரக வாகனம் என்பதால் இதன் டிசைன் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க், இறக்கமான இருக்கை மற்றும் சற்று உயரமான ஹேண்டில் பார் உள்ளிட்டவை பைக்கில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் ஆகும்.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

இத்துடன், எல்இடி மின் விளக்குகள், ஒற்ற துண்டு அமைப்பு கொண்ட இருக்கை, இரட்டை பேரல் எக்சாஸ்ட், முழு டிஜிட்டல் திறன் கொண்ட டிஎஃப் திரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பைக்கில் 500சிசி லிக்யூடு கூல்டு, ட்வின் சிலிண்டரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 46 பிஎச்பி மற்றும் 45 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. தொடர்ந்து, பைக்கின் இலகான எடைக்காக ஸ்டீல் ட்யூப் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக அப்-சைடு டவுன் ஃபோர்க் முன் பக்க வீலிலும், பின்பக்க வீலில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

இதேபோன்று சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன் பக்க வீலில் 280மிமீ இரட்டை டிஸ்க்கும், பின் பக்க வீலில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வழக்கமான ஓர் அம்சமாக 502சி பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

புதிய பெனெல்லி 502சி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியிருப்பதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகள் மற்றும் கவாஸாகி வல்கன் எஸ் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. குறிப்பாக, விலையில் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் உள்ளது.

உண்மையிலேயே கவாஸாகி வல்கேன் எஸ் பைக்கிற்கு செம்ம போட்டிதான்! 1லட்ச ரூபா குறைவான விலையில் பெனெல்லி 502சி அறிமுகம்!

ஆம், இந்த பைக்கைக்காட்டிலும் 502சி ஒரு லட்ச ரூபாய் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், பெனெல்லி 502சி க்ரூஸர் பைக்கின் வருகை கவாஸாகி நிறுவனத்திற்கு லேசான நடுக்கத்தை வழங்கியிருப்பதாக வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli 502c Cruiser Bike Launched In India At Rs 4.98 Lakh. Read In Tamil.
Story first published: Thursday, July 29, 2021, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X