இன்னுமொரு புதிய பைக்கை அறிமுகத்திற்கு தயார்ப்படுத்தும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... இந்தியர்களை கவர அதிரடி!

இந்திய அட்வென்சர் பயண பிரியர்களைக் கவர்வதற்காக மற்றுமொரு புதிய பைக்கை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

சூப்பர் மற்றும் பிரீமியம் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி வெள்ளிக்கிழமை அன்று அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் பிஎஸ்-6 தரத்திலான டிஆர்கே 502 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ரூ. 4.80 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இப்பைக் நாட்டில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

இந்த நிலையில், இப்பைக்கின் டிசைன் மற்றும் பல்வேறு அம்சங்களைத் தாங்கிய மற்றுமொரு பைக்கையும் இந்தியாவில் களமிறக்க பெனெல்லி திட்டமிட்டிருக்கின்றது. அட்வென்சர் ரக இருசக்கர வாகன சந்தையைக் குறி வைக்கும் நோக்கில் இப்பைக்கை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

டிஆர்கே 502எக்ஸ் எனும் பெயரிலேயே அப்பைக் ஸ்டாண்டர்டு மாடலாக கொண்டு வர இருப்பதாக ஹிந்துஸ்தான் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகாஷ் ஜாபாக் உடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதில், "2021ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் புதிய டிஆர்கே 502எக்ஸ் பைக் விற்பனைக்கு வந்துவிடும்" என்பது தெரிய வந்திருப்பதாகவும் அச்செய்தியில் அது கூறியிருக்கின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

நீண்ட தூர சாலை பயணத்தை விரும்புவோர்க்கு ஏற்ற டூரிங் ரக பைக்கைப் போல் புதிய டிஆர்கே 502எக்ஸ் உருவாக இருக்கின்றது. ஆகையால், பெரும்பான்மையான அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களை இப்பைக் கவரும் என்பது தெளிவாக தெரிகின்றது. இவர்களைக் கவரும் நோக்கிலேயே பெனெல்லி இத்தரத்திலான பைக்கை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

அட்வென்சர் பயணத்திற்கான பல்வேறு சிறப்பு அணிகலன்களையும், கருவிகளையும் இப்பைக் பெறவிருப்பதால் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் டிஆர்கே 502 பைக்கைக் காட்டிலும் அதிக விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில்,ரூ. 5.10 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே டிஆர்கே 502எக்ஸ் பைக் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

மேற்கூறியது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இப்பைக்கில், பிஎஸ் 6க்கு இணக்கமான 500 சிசி எஞ்ஜின் இடம்பெற இருக்கின்றது. இரட்டை சிலிண்டர்களைக் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47.5 பிஎஸ் பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

இது 6 ஆறு ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் இணைந்தே இத்தகைய திறனை வெளிப்படுத்த இருக்கின்றது. பெனெல்லி நிறுவனத்தின் முதல் பிஎஸ் 6 தயாரிப்பு இம்பீரியல் 400 மாடல் ஆகும். இதனைத் தொடர்ந்தே இந்தியாவில் அதன் பிஎஸ்6 பைக்காக டிஆர்கே 502 விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இந்தியர்களை கவர இன்னுமொரு புதிய பைக்கை தயார் செய்கிறது பிரபல டூ-வீலர் நிறுவனம்... எந்த ரகத்தில் வரவிருக்கிறது தெரியுமா?

இதையடுத்து மேலும் சில பைக்குகளையும் பிஎஸ்6 தரத்தில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பெனெல்லி ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையிலேயே புதிதாக டிஆர்கே 502எக்ஸ் பைக் இணைந்திருக்கின்றது. இதன் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியிருப்பது இந்திய அட்வென்சர் பயண பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Planning To Launch TRK 502X In India By March 2021. Read In Tamil.
Story first published: Saturday, January 30, 2021, 9:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X