பெனெல்லியின் தொலைத்தூர பயணங்களுக்கான முதல் 1200சிசி பைக்!! சீனாவில் வெளியானது...

பெனெல்லியின் முதல் மிக பெரிய டூரிங் பைக்கான 1200ஜிடி-இன் விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெனெல்லியின் தொலைத்தூர பயணங்களுக்கான முதல் 1200சிசி பைக்!!

சீனாவில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பெனெல்லி 1200ஜிடி பைக்கில் 1,209சிசி, 3-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பெனெல்லி டொரண்டோ ட்ரேவின் 898சிசி என்ஜினின் பரிணாம வளர்ச்சியாக இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 1,209சிசி 3-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 134 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 120 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இத்தகைய பெரிய என்ஜினை பெற்றதன் மூலம் 1200ஜிடி சீனாவில் தயாரிக்கப்படும் மிக பெரிய மோட்டார்சைக்கிளாக உருவெடுத்துள்ளது.

இந்த 1200சிசி பெனெல்லி பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 200கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டூரிங் ரக மோட்டார்சைக்கிளை பொறுத்தவரையில் இது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய டாப்-ஸ்பீடு ஆகும்.

பெரிய என்ஜின் அமைப்பிற்கு ஏற்ப பெனெல்லி 1200ஜிடி பைக்கின் மற்ற பாகங்களும் நன்கு பெரியதாகவும், சிறப்பு வசதிகளுடனும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பைக்கின் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது.

இதனுடன் சுழற்றக்கூடிய பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், நாவிகேஷன் உள்ளிட்டவற்றையும் பெனெல்லியின் இந்த முதல் பெரிய தோற்றம் கொண்ட டூரிங் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

பாதுகாப்பான பயணத்திற்காக பைக்கின் முன் மற்றும் பின்பக்கத்தில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அருகில் செல்லும் வாகனங்களை பற்றியும், இயங்கும் சாலையின் போக்குவரத்தை பற்றியும் ஓட்டுனர் அறிய உதவியாக இருக்கும். இதற்காக 15 இன்ச்சில் முழு டிஎஃப்டி திரையினை இந்த பெனெல்லி பைக் கொண்டுள்ளது.

ஆனால் முன்மாதிரியில் பகுதி அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் ப்ரெம்போ ப்ரேக்குகள், யுஎஸ்டி ஃபோர்க், போஸ்ச் ஏபிஎஸ் மற்றும் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய மோனோஷாக்கையும் 1200ஜிடி ஏற்றுள்ளது.

சீனாவில் பெனெல்லி 1200ஜிடி பைக்கின் விலை 99,800 யுவான் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.11.53 லட்சமாகும். இந்த விலை பெனெல்லியின் இந்த டூரிங் பைக்கிற்கு போட்டியாகவுள்ள பிஎம்டபிள்யூ ஆர்1250 ஆர்டி பைக்குடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானதாகும்.

ஏனெனில் இந்த பிஎம்டபிள்யூ டூரிங் பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.23 லட்சமாக உள்ளது. பெனெல்லி 1200ஜிடி பைக் இந்திய சந்தையில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli's biggest touring bike 1200GT breaks cover, gets 15-inch screen.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X