ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

கடந்த 2020ல் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டு வாங்க முடியாமல் போனவரா நீங்கள்?, உங்களுக்காகவே ரூ.2 லட்சத்திற்குள் 2020ல் விற்பனையில் சக்கைபோடு போட்ட ப்ரீமியம் தரத்திலான பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

பஜாஜ் டோமினார் 250

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டோமினார் 400 பைக்கின் சிறிய ரக வெர்சனாக பஜாஜ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் மாடல்தான் டோமினார் 250. 400சிசி வெர்சனை காட்டிலும் அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக வழங்கப்பட்டுள்ள இந்த 250சிசி பைக்கில் கேடிஎம் 250 ட்யூக்கின் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

ஆனால் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 26.6 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் டோமினார் 250 பைக்கில் இந்த என்ஜின் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் டோமினார் 250 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.65 லட்சமாக உள்ளது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

டிவிஎஸ் மோட்டார்ஸின் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் சந்தைக்கு ஒன்றும் அவ்வளவு புதியது கிடையாது. ஆனால் 2020ஆம் ஆண்டிற்காக இந்த டிவிஎஸ் பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸனக்ட் சிஸ்டத்துடன் ப்ளூடூத் இணைப்பு, க்ளைட் த்ரூ தொழிற்நுட்பம் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

இவற்றுடன் பிரிவில் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் ஸ்போர்ட், அர்பன் மற்றும் மழை என்ற மூன்று ரைடிங் மோட்களையும் ஏற்றுள்ளது. 198சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு என்ஜின் உடன் ரூ.1.31 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த 200சிசி டிவிஎஸ் பைக் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பைக்காக விளங்குகிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்

புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர், ஹீரோ மோட்டோகார்பின் அன்றாட பயன்பாட்டிற்கான லேட்டஸ்ட் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளாகும். இதில் பொருத்தப்படும் 163சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

சிங்கிள் டிஸ்க் ப்ரேக் (ரூ.1.02 லட்சம்) மற்றும் இரட்டை-டிஸ்க் ப்ரேக் (ரூ.1.05 லட்சம்) என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மென்மையான செயல்படுதிறன், சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினால் அன்றாடம் பயன்படுத்தும் 160சிசி பைக்குகளில் முதன்மையானதாக விளங்கி வருகிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய 350சிசி ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மீட்டியோர் 350 பைக்கில் புதிய என்ஜின் மற்றும் புதிய சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் புதிய 350சிசி எஸ்ஒஎச்சி என்ஜின் அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 4000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வழங்கப்படுகிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

மற்ற 350சிசி ராயல் என்பீல்டு பைக்குகளின் என்ஜினை காட்டிலும் வேறுப்பட்டதாக வழங்கப்படும் இந்த என்ஜின் அமைப்பில் அதிர்வை குறைப்பதற்காக முதன்மை பேலன்சர் ஷாஃப்ட் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. 3 விதமான வேரியண்ட்களில் வழங்கப்படுகின்ற இந்த பைக்கின் விலை ரூ.1.75 லட்சத்தில் ஆரம்பிக்கிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350

மீட்டியோர் போன்ற ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கொண்டுவந்த பைக் மாடல்தான் ஹைனெஸ் சிபி350. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற இந்த பைக்கில் 348சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஓவர்ஹெட் காம் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 20.8 பிஎச்பி பவரையும், 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச், கவுண்டர்பேலன்சர் மற்றும் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற நேர்த்தியான அம்சங்களை பெறும் ஹைனெஸ் சிபி350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்திற்குள் இத்தனை தரமான பைக்குகள் கிடைக்கிறதா?! பஜாஜ் டோமினார் to ராயல்என்பீல்டு மீட்டியோர்...

இவற்றில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 என்ற 350சிசி பைக்குகளின் விலைகள் ரூ.2 லட்சத்திற்குள் ஆரம்பித்தாலும், அவற்றின் விலை குறைவான வேரியண்ட்களை சொந்தமாக்கவே ரூ.2.10 - ரூ.2.20 லட்சம் ஆகிவிடும். இந்த ஐந்து பைக்குகளுடன் இந்த லிஸ்ட் நிற்கவில்லை, ஹீரோவின் மலிவான அட்வென்ச்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200, ஹோண்டா ஹார்னெட் 2.0 என தொடர்கிறது.

Most Read Articles

English summary
Top 5 Bikes Of 2020 Under Rs 2 Lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X