இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரை வாங்கிய முதல் நபரின் விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் சி 400 ஜிடி ஸ்கூட்டர் (BMW C 400 GT) ஸ்கூட்டர், இந்திய சந்தையில் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்திய சந்தையில் தொடங்கியுள்ளது. எனவே இந்த ஸ்கூட்டருக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டர், சிபியூ (Completely Built-up Unit - CBU) வழியில் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும். பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

மல்டி-ஃபங்ஷனல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6.5 இன்ச் முழு கலர் டிஎஃப்டி திரை, கனெக்டிவிட்டி ஃபங்ஷன்கள், ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டர் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த ஸ்கூட்டரில், 350 சிசி, வாட்டர் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 ஹெச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 139 கிலோ மீட்டர் ஆகும். அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த ஸ்கூட்டர் வெறும் 9.5 வினாடிகளில் எட்டி விடும்.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

இந்திய சந்தையில் அல்பைன் ஒயிட் மற்றும் ஸ்டைல் ட்ரிபிள் பிளாக் என மொத்தம் 2 வண்ண தேர்வுகளில் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டர் கிடைக்கும். ஆனால் வெளிநாட்டு சந்தைகளில் கலிஸ்டோ க்ரே மெட்டாலிக் என்ற வண்ண தேர்வையும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வண்ண தேர்வு இல்லை.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

இது முறையாக மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட், யமஹா ஏரோக்ஸ் 155 மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 போன்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் கிடைத்து வருகின்றன. இவை எதுவும் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டருக்கு நேரடி போட்டி கிடையாது. எனினும் இவை அனைத்தையும் விட பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டர் மிகவும் பெரியது.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மிகவும் சக்தி வாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். எனவே தினசரி பயன்பாடுகளுக்கு மட்டுமல்லாது, நெடுஞ்சாலைகளில் தொலை தூர பயணங்களுக்கும் இதனை பயன்படுத்தலாம். இந்த ஸ்கூட்டரின் எடை 214 கிலோ ஆகும். இது மிகவும் அதிக எடை என்பதில் சந்தேகமில்லை. எனினும் இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் வெறும் 775 மிமீ மட்டுமே.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

எனவே அதிக எடை கொண்டதாக இருந்தாலும் கையாள்வதற்கு எளிமையாக இருக்கும். பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரில் முழு எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹெட்லேம்ப், டெயில்லேம்ப், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் பகல் நேர விளக்குகள் என அனைத்திலும் எல்இடி பல்புகள்தான் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரின் விலையை கேட்டால் நீங்கள் பிரம்மித்து போவது உறுதி. ஏனெனில் இந்த ஸ்கூட்டருக்கு 9.95 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. எனவே இன்றைய தேதியில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரை கூறலாம்.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

நாங்கள் மேலே கூறியிருப்பது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. இந்த ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை சுமார் 13 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது எக்ஸ் ஷோரூம் விலையை காட்டிலும் ஆன் ரோடு விலை 3 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருகிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளைதான் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

இந்த அளவிற்கு விலை உயர்ந்த ஸ்கூட்டரை யாராவது வாங்குவார்களா? என நீங்கள் நினைத்து விட வேண்டாம். அதிகப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஸ்கூட்டருக்கு 100 முன்பதிவுகள் வந்துள்ளன. இதில் முதல் ஆளாக ஸ்வரன்ஜித் பஜாஜ் என்பவர் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரை டெலிவரி எடுத்திருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

இவர்தான் இந்தியாவில் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி ஸ்கூட்டரின் முதல் வாடிக்கையாளர் என கூறப்படுகிறது. 13 லட்ச ரூபாயை செலவு செய்து ஒரு ஸ்கூட்டரை வாங்குவது என்பது உண்மையில் சாதாரணமான விஷயம் கிடையாது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதும், இந்த ஸ்கூட்டரின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Bmw c 400 gt premium maxi scooter deliveries commence here are all the details
Story first published: Wednesday, October 13, 2021, 18:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X