BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

தங்களது முதல் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவுகள் 100-ஐ தொட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்தும் பிஎம்டபிள்யூவின் இந்த முதல் ஸ்கூட்டரை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

கடந்த மாதத்தில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அதன் முதல் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி இருந்தது. இந்த எதிர்கால பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் தொடர்பான டீசர் முதன்முதலாக இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் என்பது மட்டுமின்றி, நம் நாட்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் முதல் முறையான மேக்ஸி-ஸ்கூட்டர் இதுவாகும். சர்வதேச சந்தைகளில் சி400எக்ஸ் மற்றும் சி400 ஜிடி (C400 GT) என்ற இரு மேக்ஸி-ஸ்கூட்டர்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

இவை இரண்டும் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் புதிய ஆண்டிற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இதில் சி400 ஜிடி ஸ்கூட்டருக்கு மட்டுமே தற்போதைக்கு இந்தியாவில் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு முன்பதிவு செய்துவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே 100-ஐ தொட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

விருப்பம் உள்ளவர்கள் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் டீலர்ஷிப்களின் மூலம் இந்த ஸ்கூட்டரை ரூ.1 லட்சம் என்கிற முன்தொகையுடன் முன்பதிவு செய்யலாம். C 400 GT ஸ்கூட்டருக்கான இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையினை தற்போது வரையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது அதன் விலைகள் அறிவிக்கப்படலாம்.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

மலேசியாவில் பிஎம்டபிள்யூ சி400 ஜிடி ஸ்கூட்டரின் விலை RM 48,500 (இந்திய ரூபாயில் ரூ.8.51 லட்சம்)-ஆக உள்ளது. இந்திய சந்தையில் கிட்டத்தட்ட இதே அளவிலான விலையிலேயே இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை எதிர்பார்க்கிறோம். தோற்றத்தை பொறுத்தவரையில், மேக்ஸி-ஸ்கூட்டர் என்பதால் சி400 ஜிடி மாடல் பருமனான உடலமைப்புடன் வடிவமைக்கப்படுகிறது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

மற்ற மேக்ஸி-ஸ்கூட்டர்களை போன்று இந்த பிஎம்டபிள்யூ மேக்ஸி-ஸ்கூட்டரின் முன்பக்க எடையும் கூடுதல் ஸ்டைலிங் பாகங்களினால் அதிகமாக உள்ளது. முன்பக்கத்தில் 2-பீம் ஹெட்லைட் அமைப்பு, பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடியை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் இருக்கை அமைப்பு ஒற்றை துண்டாக வழங்கப்பட்டுள்ளது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

அதேபோல் ஓட்டுனர் கால் வைப்பதற்கான பகுதி பிளவுப்பட்ட வடிவில் உள்ளது. பின்பக்கத்தில் ஸ்டைலான க்ராப்-ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதியில் எல்இடி விளக்குகளை பார்க்க முடிகிறது. உண்மையில் இவையே ஸ்கூட்டருக்கு ப்ரீமியம் தரத்திலான தோற்றத்தினை வழங்குகின்றன.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

ஓட்டுனர் இருக்கை சற்று தாழ்வாக அமைக்கப்பட்டிருந்தாலும், பின் பயணிக்கான இருக்கை நன்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பிஎம்டபிள்யூ மேக்ஸி-ஸ்கூட்டரை ஓட்டும் எந்தவொரு ரைடருக்கும் அசவுகரியமான உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே. ஏனெனில் இதற்கு ஏற்ப ஹேண்டில்பாரும் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

மேலும் ஓட்டுனரின் இருக்கையில் லம்பரும் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்நுட்பங்களை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளில் அதிக தொழிற்நுட்பங்களுடன் வடிவமைக்கும் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த மேக்ஸி-ஸ்கூட்டரிலும் சுற்றிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

இதனுடன் சாவியில்லா இக்னிஷன், ரைடு-பை-வயர் த்ரோட்டல், முன்பக்க க்ளோவ் பெட்டகத்தில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி, ஹீட்டட் க்ரிப்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இணைப்பு வசதியுடன் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றையும் சி400 ஜிடி ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

மேலும் அப்டேட் செய்யப்பட்ட சி400 ஜிடி மாடலில் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைப்பால் முன்பை காட்டிலும் மிகவும் நுட்பமாக செயல்படக்கூடியதாக மாறியுள்ள இந்த ஸ்டெபிளிட்டி கண்ட்ரோலின் உதவியுடன் குறைந்த ட்ராக்‌ஷன் பரப்பிலும், அதிக ட்ராக்‌ஷனை பெற முடியும்.

BMW-வின் முதல் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் முன்பதிவு!! இதுவரையில் 100ஐ தொட்டுவிட்டதாம்!

இதனுடன் வாகனம் திருடு போவதை எச்சரிக்கும் அலாரத்தையும் பெற்றுள்ள புதிய சி400 ஜிடி ஸ்கூட்டரில் 350சிசி, சிங்கிள்-சிலிண்டர், நீர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-இல் 34 பிஎச்பி மற்றும் 5750 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய உள்ள இந்த என்ஜினின் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 139கிமீ வேகத்தில் செல்லலாம். என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
BMW C 400 GT Maxi-Scooter Receives Nearly 100 Bookings.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X