பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

2021 பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்குகளின் இந்திய அறிமுகத்தை புதிய டீசரின் மூலம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 2021 எஸ் 1000ஆர் பைக்கை தொடர்ந்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பைக்குகளுள் 2021 ஆர் 1250ஜிஎஸ் மற்றும் அதன் அட்வென்ச்சர் வெர்சனும் உள்ளன.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில் தான் இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளின் படங்களுடன் ட்விட் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இவை இரண்டும் இந்திய சந்தையில் அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றில் அட்வென்ச்சர் வெர்சன் 40ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளிவருகிறது. புதிய வசதிகளுடன் புதிய பெயிண்ட் தேர்வுகளும் இந்த 2021 பிஎம்டபிள்யூ பைக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வகையில் ஆர்1250 ஜிஎஸ் பைக் ட்ரிபிள் கருப்பு மற்றும் இளம் வெள்ளை என்ற இரு நிறத்தேர்வுகளை பெற்றுள்ளது.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

40ஆம் ஆண்டு நிறைவு எடிசனிற்கு பிரத்யேகமான பனியின் க்ரே நிற பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்டாண்டர்ட் மாடலின் ட்ரிபிள் கருப்பு நிறத்திலும் இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளை பெறலாம்.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த 2021 மாடல்களில் மிக முக்கிய அம்சமாக புதிய அடாப்டிவ் கார்னரிங் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒளி பிரதிப்பலிப்பான் ஹெட்லைட் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்றாற்போல் 30 டிகிரிக்கு சுழற்றலாம்.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றுடன் "ஃபாலோ மீ ஹோம்" போன்ற இந்திய சந்தைக்கு புதியதான தொழிற்நுட்ப வசதிகளையும் கொண்டுவர பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களாக டைனாமிக் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் "ஈக்கோ" ரைடிங் மோட் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவை மட்டுமின்றி, வெறும் சக்கரங்களை பிடித்தும் மட்டும் வைக்காமால், சக்கரங்களில் ப்ரேக்குகளுக்கு அழுத்தத்தை வழங்கக்கூடிய ஏபிஎஸ் ப்ரோவும் இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்குகளில் எதிர்பார்க்கலாம். இது, முன்பக்க ப்ரேக் மட்டுமே பயன்பாட்டில் இருந்தாலும், அப்போதும் அழுத்தத்தை ப்ரேக்குகளுக்கு வழங்கக்கூடியது.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் ப்ரோவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2021 பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் மற்றும் இதன் அட்வென்ச்சர் வெர்சனில் 1254சிசி பாக்ஸர் இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 136பிஎஸ் மற்றும் 143 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் ஆற்றல் ஷாஃப்ட் ட்ரைவ் வாயிலாக பின் சக்கரங்களுக்கு செல்கிறது.

பான் அமெரிக்காவிற்கு போட்டி பைக்கை களமிறக்க தயாராகும் பிஎம்டபிள்யூ!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகிவிட்ட ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கிற்கும், நடப்பு ஜூன் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் டுகாட்டி மல்டிஸ்டாராடா வி4 பைக்கிற்கும் போட்டியாக வெளிவரவுள்ள இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்குகளின் விலைகள் முறையே ரூ.20.45 லட்சம் மற்றும் ரூ.22.35 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளன.

Most Read Articles
English summary
2021 BMW R 1250 GS And R 1250 GS Adventure Teased Ahead Of India Debut.
Story first published: Tuesday, June 22, 2021, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X