இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா நிறுவனம் விரைவில் சி400 ஜிடி என்கிற பெயரில் அதன் மேக்ஸி-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மேக்ஸி-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவன டீலர்கள் ஏற்று வருகின்றனர்.

ரூ.1 லட்சம் என்கிற டோக்கன் தொகையுடன் இந்த முன்பதிவுகள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் தொடர்பான மற்றுமொரு டீசர் வீடியோ பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ஸ்கூட்டரை பற்றி எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. ஸ்கூட்டரின் விளம்பர வீடியோவாகவே இது அமைந்துள்ளது. இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ சி400 ஜிடி மேக்ஸி-ஸ்கூட்டரில் 350சிசி ஒற்றை-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 33.5 பிஎச்பி மற்றும் 5,750 ஆர்பிஎம்-இல் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனில் கூடுதல் மென்மைக்காக இந்த ஸ்கூட்டரில் க்ளட்ச் சுருள்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 139கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

க்ளட்ச் சுருள் அப்டேட் உடன் புதிய 'இ-வாயு' அமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் மேலாண்மை அமைப்பு மற்றும் புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் தற்போது யுரோ 5/ பிஎஸ் 6க்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

இதற்காக புதிய கேட்டலிடிக் கன்வெர்டர் மற்றும் புதிய ஆக்ஸிஜன் சென்சாருடன் சிலிண்டரின் தலைப்பகுதியும் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதல் க்ரிப்பிற்காக திருத்தப்பட்ட தானியங்கி ஸ்டெபிளிட்டி கண்ட்ரோலை இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூவின் மேக்ஸி-ஸ்கூட்டர்!! முன்பதிவுகள் நடக்கின்றன

இந்த தொழிற்நுட்பம், வழுக்கும் பாதைகளில் ஸ்கூட்டரை பின்பக்கத்தில் இருந்து நிலையான ரைடிங்கை வழங்க உதவி செய்யும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பிஎம்டபிள்யூ சி 400ஜிடி ஸ்கூட்டருக்கு நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இந்திய சந்தையில் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles
English summary
2021 BMW C 400 GT teased again ahead of debut in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X