புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் நீங்கள் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த பிரபலத்தை பயன்படுத்தி கொள்ளும் விதமாக 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் முன்பதிவு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. பிரீமியம் ஆட்டோமொபைல் பிராண்டு ஒன்று, ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலம் முன்பதிவை ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

வாடிக்கையாளர்கள் 3 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் முன்பதிவு செய்யலாம். ஆனால் நின்ஜா 300 பைக்கை டெலிவரி பெறுவதற்கு, அருகில் உள்ள கவாஸாகி ஷோரூமிற்குதான் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டும். எனினும் முன்பதிவு செய்ததற்கான வவுச்சர் ஒன்றை அமேசான் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 3.18 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் மூலம் நீங்கள் புதிய நின்ஜா 300 பைக்கை முன்பதிவு செய்தால், ஷோரூமிற்கு பலமுறை வீணாக அலைவது தவிர்க்கப்படும்.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே கூறியபடி நின்ஜா 300 பைக்கை டெலிவரி எடுக்கும்போது மட்டும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கவாஸாகி ஷோரூமிற்கு சென்றால் போதுமானது. புதிதாக விற்பனைக்கு வந்துள்ள மேம்படுத்தப்பட்ட கவாஸாகி நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு ஏற்கனவே வர தொடங்கி விட்டது.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

புதிய நின்ஜா 300 பைக்கில் கவாஸாகி நிறுவனம் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளது? என்பதை முந்தைய செய்திகளில் நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதன்படி டிசைனில் ஒரு சில மாற்றங்களை மட்டுமே புதிய கவாஸாகி நின்ஜா 300 பெற்றுள்ளது. மற்றபடி இந்த பைக் முந்தைய மாடலை போலவேதான் உள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

எனினும் புதிய வண்ண தேர்வுகளை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நின்ஜா 300 பைக் ஃப்ரெஷ்ஷாக தோற்றமளிக்கிறது. அதேபோல் முந்தைய மாடலில் இருந்த அதே இன்ஜின்தான் புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜின் தற்போது பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் உள்ள 296 சிசி, பேரலல்-ட்வின், லிக்யூட்-கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்மில் 38.4 பிஎச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கை அமேசான் மூலம் புக்கிங் செய்யலாம்... முன்பதிவு தொகை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கவாஸாகி பைக்குகளில் ஒன்றாக நின்ஜா 300 உள்ளது. இந்திய இளைஞர்கள் மத்தியில் கவாஸாகி நின்ஜா 300 பைக்கிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் புதிய மாடலுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கவாஸாகி நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Book New Kawasaki Ninja 300 Now From Amazon - Here Are All The Details. Read in Tamil
Story first published: Tuesday, March 23, 2021, 8:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X