Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

பவுன்ஸ் இன்ஃபினிட்டி (Bounce Infinity) மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

அண்மையில், மிக குறைவான விலையில் விற்பனைக்கு வழங்குவதற்காக தனது நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பேட்டரி இல்லாமல் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நிறுவனம், பவுன்ஸ் இவி (Bounce EV). பவுன்ஸ் இனிஃபிட்டி (Bounce Infinity) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதற்காக நிறுவனம் தயார்படுத்தி வருகின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் ஆகும். மிக விரைவில் இதன் அறிமுகம் இந்திய மின் வாகன சந்தையில் அரங்கேற இருக்கின்றது. இது எப்போது என்பது பற்றிய தகவலையே நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார இருசக்கர வாகனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி வெளியிடப்பட்டிருக்கின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

டிசம்பர் 2ம் தேதி அன்று பவுன்ஸ் இன்ஃபினிட்டி மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இன்னும் இந்த இருசக்கர வாகனத்திற்கு புக்கிங் பணிகள் தொடங்கப்படவில்லை. வரும் டிசம்பர் 2 அறிமுகத்திற்கு பின்னர் (அன்றைய தினத்தில் இருந்தே) புக்கிங் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

ஆனால், டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டே மேற்கொள்ளப்பட இருக்கின்றன. புக்கிங் பணிகள் ரூ. 499 என்ற முன் தொகையில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இதே முன் தொகையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன் பதிவுகளை ஏற்று வருகின்றது. பவுன்ஸ் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாகி இருக்கின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

மேலே இந்த மின்சார ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் வாங்க முடியும் என கூறியிருந்தோம். அப்படியானால், வாகனத்தை எப்படி பேட்டரி இல்லாமல் இயக்குவது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். இதற்காக நிறுவனம் ஓர் தீர்வை வழங்க இருக்கின்றது. அதாவது, நிறுவனம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்திற்கு வழங்க இருக்கின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

இதன் வாயிலாக ஓர் பெட்ரோல் ஸ்கூட்டரை இயக்குவதைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதல் லாபத்தைப் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பேட்டரி இல்லாத நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதனாலும் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும். மின் வாகனத்தின் விலைக்கு இணையான அல்லது 40 சதவீதம் வரை விலைக் கொண்டதாக பேட்டரிகள் இருக்கின்றன.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

இந்த சுமையைக் குறைக்கும் பொருட்டே பவுன்ஸ் இவி நிறுவனம் அதன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி இல்லா தேர்வில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக பல மடங்கு இ-ஸ்கூட்டரின் குறைய இருக்கின்றது. புக்கிங்கில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை நிறுவனம் எடுத்திருக்கின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

அதே நேரத்தில் நிறுவனம் பேட்டரி பொருந்திய தேர்விலும் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை கழட்டி மாட்டும் வசதியுடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், தேவைக்கேற்ப இதன் பேட்டரியை கழட்டி சென்று எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

இதேபோல், சார்ஜ் தீர்ந்த பேட்டரியை ஒப்படைத்துவிட்டு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரியையே நிறுவனம் அதன் இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தியிருக்கின்றது. மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்ஜ் மற்றும் அதில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விபரங்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

வரும் டிசம்பர் 2ம் தேதி அறிமுகத்தின்போது அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என தெரிகின்றது. நிறுவனம் மிக சமீபத்தில் 22மோட்டார்ஸ் (22Motors) நிறுவனத்தின் முழு பங்கையும் கையகப்படுத்தியது. 7 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் மதிப்பில் இந்த கொள்முதலை நிறுவனம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

Bounce Infinity இ-ஸ்கூட்டர் அறிமுக தேதி வெளியானது... பேட்டரி இல்லாமல் குறைவான விலையில் இதை வாங்கிக்கலாம்!

இதனைத் தொடர்ந்து நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 1,80,000 ஆயிரம் யூனிட் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. இத்துடன், இன்னும் ஓர் புதிய ஆலையை தென்னிந்தியாவிலும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Bounce ev reveals infinity e scooter launch date here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X