ரூ.499 இருந்தா போதும் உடனே புக் செய்யலாம்! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர் அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 (Bounce Infinity E1) மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பவுன்ஸ் (Bounce). எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Electric Mobility) நிறுவனமான இது தற்போது மின் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போது அதன் முதல் தயாரிப்பான இன்ஃபினிட்டி இ1 (Infinity E1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் இந்தயாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகக் குறைந்த விலையாக ரூ. 68,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கழட்டி மாட்டும் லித்தியம்-அயன் பேட்டரி வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வின் விலையாகும். இதே மின்சார ஸ்கூட்டர் பேட்டரி இல்லா நிலையில் ரூ. 45,099-க்கு விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. மேலே பார்த்த அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரும் விலையாகும்.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

பேட்டரி இல்லாமலா..! இது இல்லாம எப்படிங்க ஸ்கூட்டரை ஓட்டுறது என கேட்க தோன்றலாம். இதற்கான தீர்வாக பவுன்ஸ் நிறுவனம் 'பேட்டரி ஓர் சேவை' (Battery-As-A-Service) எனும் திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை குறைந்த கட்டணத்தில் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகளும் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடங்கியுள்ளது. ரூ. 499 என்ற மிக குறைவான முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இது ஓர் திரும்பப் பெறக் கூடிய தொகை ஆகும். எதிர்காலத்தில் மின்சார ஸ்கூட்டரின் புக்கிங்கை ரத்து செய்ய விரும்பினால் செலுத்திய தொகையை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இப்போது புக் செய்வோருக்கு 2022 மார்ச் மாதத்தில் இருந்து மின்சார ஸ்கூட்டரை டெலிவரி வழங்க இருப்பதாக பவுன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேம் 2 திட்டம் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், ஒரு சில மாநிலங்கள் பிரத்யேகமாக அம்மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக மானிய திட்டங்களை அறிவித்திருக்கின்றது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் வழங்கப்படும் மானியத்தின்கீழ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி உடன் ரூ. 59,999-க்கு விற்பனைக்குக் கிடைக்கும். அதேநேரத்தில் தமிழகத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்ர் ரூ. 79,999 என்ற விலையில் விற்கப்பட இருக்கின்றது. பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்போர்ட்டி சிவப்பு, ஸ்பார்க்கிள் கருப்பு, பியர்ல் வெள்ளை, டெசாட் வெள்ளி மற்றும் காமெட் சாம்பல் ஆகிய நிற தேர்வுகளில் இ-ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 83 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய பிஎல்டிசி மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இது வெறும் எட்டே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ வேகம் ஆகும். இத்துடன் அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கும் விதமாக ஐபி67 ரேட்டட் 48வோல்ட், 39AH பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். குறைந்த வேகத்தை வழங்கும் ஈகோ மோடில் வைத்து இயக்கும்போதே இந்த அதிகபட்ச பயண தூரத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி மின்சார ஸ்கூட்டரின் மேம்பாட்டிற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றது.

பேட்டரி இல்லாம வாங்கிக்கலாம்... அறிமுகமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Bounce Infinity E1 இ-ஸ்கூட்டர்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?

இதனை விரைவில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மின்சார ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள், 50 ஆயிரம் கிமீட்டர்கள் வரை வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலா இ ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் இன்ஃபினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles

English summary
Bounce infinity e1 electric scooter launched in india at rs 79999
Story first published: Thursday, December 2, 2021, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X