பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

பெங்களூரை சேர்ந்த பவுன்ஸ் நிறுவனம் புதிய பவுன்ஸ்-இ (Bounce-E) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து எலக்ட்ரிக் வாகன வணிகத்தில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்த புதிய இவி ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

என்3310 என்ற குறியீட்டு பெயரால் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுவந்த பவுன்ஸ்-இ ஸ்கூட்டரின் ஒரிஜினல் வெர்சன் முன்னதாக கடந்த ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்து இந்த விற்பனைக்கு வந்துள்ள ஸ்கூட்டர் சில மாற்றங்களை ஏற்றுள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஒரிஜினல் வெர்சனில் வழங்கப்பட்டிருந்த விஸர் இந்த விற்பனை மாடலில் இல்லை. அதேபோல் ஹெட்லேம்ப்பும் சிறியதாகவும், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுக்கு பதிலாக சுருள் நிரப்பப்பட்ட சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

ஸ்கூட்டரின் நிறத்திற்கு ஏற்ப இருக்கையில் மெல்லிய தையல் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக பார்ப்பதற்கு பவுன்ஸ்-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 100சிசி மொபெட்-ஐ போல் உள்ளது. ஆனால் பயணம் செய்தால், கால் வைக்கும் பகுதி ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதை காட்டிலும் சற்று முன்னோக்கி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

ஏனெனில் இரு கால்களுக்கு இடையில் பொருட்களை வைக்க சற்று பெரியதாகவே இடம் வழங்கப்பட்டுள்ளது. தானியங்கி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்திடம் இருந்து ஒத்திசைவு சான்றிதழை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெற்றிருந்த பவுன்ஸ்-இ ஸ்கூட்டரில் இடமாற்றக்கூடிய பேட்டரி தொகுப்பை வழங்கியுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

சார்ஜிங் நிலையத்திற்கு சென்று சார்ஜ் ஏற்றி கொள்வதை காட்டிலும் இவ்வாறு இடமாற்றக்கூடிய பேட்டரி, வாகனம் பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் சவுகரியமானதாக இருக்கும். மேலும் இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்து கொண்டு 60கிமீ வரையில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

இந்த ஸ்கூட்டர் பயன்படுத்தும் முறை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. ஏனெனில் பவுன்ஸ்-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ.46,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் பேட்டரி இல்லாத ஸ்கூட்டரையே பெற முடியும். பேட்டரி, குத்தகை முறையில் வழங்கப்படவுள்ளது.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

இந்த முறையினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர் ஆவது எளிதானதாக மற்றும் மலிவானதாக இருக்கும் என்று பவுன்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பவுன்ஸ் வாடகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.

பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!

பவுன்ஸ்-இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் மாத சந்தா திட்டங்களிலோ அல்லது நீண்ட கால வாடகை அடிப்படையிலோ பொன்ஸ் அப்ளிகேஷன் வாயிலாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தலாம். இந்த வசதி தற்போதைக்கு பெங்களூர் நகரத்தில் மட்டும்தான் உள்ளது.

Most Read Articles
English summary
Bounce-E Electric Scooter Launched, Booking Via Mobile App.
Story first published: Sunday, February 28, 2021, 4:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X