Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிள் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. அது எப்போது, எங்கு வெளியீடு பெற இருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

பல ஆண்டுகள் கழித்து ஜாவா (Jawa) நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. தனக்கு சொந்தமான கிளாசிக் லெஜன்ட்ஸ் (Classic Legends) நிறுவனத்தின் வாயிலாக மஹிந்திரா நிறுவனம் ஜாவா மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

இந்த நிலையில், கிளாசிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பிரபல பிராண்டான யெஸ்டி மோட்டார்சைக்கிள்களும் (Yezdi Motorcycle) மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. இதற்கான முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

பிராண்டின் ரோட்கிங் மாடலே முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இப்பைக் சாலைகளில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனக்கு சொந்தமான மற்றுமொரு பழம் பெரும் மோட்டார்சைக்கிள் பிராண்டான பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிள்களையும் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

இதுகுறித்த தகவலை பிஎஸ்ஏ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நிறுவனம், வரும் 4ம் தேதி அன்று மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டிலேயே நிறுவனத்தின் முதல் பைக் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

இதைத்தொடர்ந்து, உலக நாடுகளில் மிக விரைவில் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நம்பப்படுகின்றது. பிஎஸ்ஏ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சாலைகளில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், இங்கிலாந்தைத் தொடர்ந்து பிஎஸ்ஏ பைக்குகள் இந்தியாவில் களமிறங்கினாலும் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத காரணத்தினால் இந்திய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் பிரியர்கள் சற்றே கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அதேநேரத்தில், பிஎஸ்ஏ-வின் இந்திய வருகை எப்போது வேண்டுமானாலும் அமைய என்ற ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பிஎஸ்ஏ நிறுவனத்தின் கிளாசிக் ரக வாகனங்கள் விரைவில் களமிறக்கப்பட இருக்கின்றன. பெரிய சிங்கிள் சிலிண்டர், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆகியவை இப்பைக்கில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

அண்மையில் கேமிராவின் கண்களில் சிக்கிய முன் மாதிரி மாடலில் இடம் பெற்றிருந்த அம்சங்களை வைத்து இது கூறப்படுகின்றது. ஆனால், இது உறுதியான தகவல்கள் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், புதிய பிஎஸ்ஏ இருசக்கர வாகனம் என்ன மாதிரியான ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என்பது வரும் டிசம்பர் 4ம் தேதி அன்று தெரிய வந்துவிடும்.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளின் மறு வருகை உலகளவில் உள்ள கிளாசிக் ரக இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆரம்பத்தில் சிறிய ரக ஆயுதங்களை தயாரித்து வந்த பிஎஸ்ஏ நிறுவனம் 1910ம் ஆண்டிலேயே முதல் முறையாக மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் களமிறங்கியது.

Royal Enfield பைக்குகளுக்கு ஆப்பு ரெடியாயிருச்சு! இந்த தேதியிலதான் BSA மோட்டார்சைக்கிள் அறிமுகமாகபோகுது!

1960ம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனத்தின் தயாரிப்புகள் படையெடுப்பால் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விற்பனை மிகக் கடுமையாகச் சரிவைச் சந்தித்தது. இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக அனைத்து நடைவடிக்கைகளுக்குமே நிறுவனம் முற்று புள்ளி வைத்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் 2021ம் ஆண்டில் உலகளவில் வர்த்தக பணியைத் தொடங்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Bsa motorcycle launch date revealed here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X