கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிஎஃப் மோட்டோ 800எம்டி பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனத்திற்கும், ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர கூட்டணி உள்ளது. இதன் காரணமாக சில மோட்டார்சைக்கிள்களை கேடிஎம் பைக்குகளின் அடிப்படையில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

இந்த வகையில் தற்போது மிடில்வெய்ட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக சிஎஃப் மோட்டோ 800எம்டி, இந்த கூட்டணியில் இருந்து வெளிவந்துள்ளது. என்ஜின் உள்பட இந்த புதிய பைக் பெரும்பான்மையாக கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

இதன்படி இந்த சிஎஃப் மோட்டோ அட்வென்ச்சர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 799சிசி எல்சி8 இணையான-இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 78 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

என்ஜினை அப்படியே பெற்றிருந்தாலும், 800எம்டி பைக் தனித்துவமான சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பை ஏற்றுள்ளது. ப்ரேக்கிங் வன்பொருள்கள் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜே-ஜூவான் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயணங்களுக்காக மட்டுமில்லாமல், இந்த சிஎஃப் மோட்டோ அட்வென்ச்சர் பைக்கை பொது சாலைகளிலும் பயன்படுத்தலாம். அதற்கு ஏற்றாற்போல் தான் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

செயற்கை கோள் நாவிகேஷன் உடன் 7 இன்ச்சில் டிஎஃப்டி திரையை பெற்றுள்ள இந்த பைக்கில் ஹேண்டில்பார் க்ரிப்கள் மற்றும் இருக்கை ஹீட்டட் அம்சத்துடன் உள்ளன. இவற்றுடன் ரைடு-பை-வயர் த்ரோட்டல், என்ஜின் வரைப்படங்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோலும் இந்த பைக்கில் உள்ளன.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கை போல் அல்லாமல் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கில் பெட்ரோல் நன்கு உயரமாக வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்பக்கத்தில் 19 இன்ச் மற்றும் 17 இன்ச்சில் சக்கரங்களை பெற்றுவந்துள்ள இந்த அட்வென்ச்சர் பைக் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

790 அட்வென்ச்சரை காட்டிலும் சிஎஃப் மோட்டோ 800எம்டி பைக் சற்று எடை மிக்கதாக உள்ளது. அதாவது அலாய் சைடு கேஸஸ் மற்றும் டாப் பாக்ஸ் உள்ளிட்டவற்றினால் இதன் எடை 790 அட்வென்ச்சரை காட்டிலும் 16 கிலோவிற்கும் அதிகமாக உள்ளது.

கேடிஎம் 790 அட்வென்ச்சரை அடிப்படையாக கொண்ட, 800எம்டி பைக்கை வெளியிட்டது சிஎஃப் மோட்டோ!!

இந்தியாவில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ், எஃப் 850 ஜிஎஸ் மற்றும் ட்ரையம்ப் டைகர் 900 பைக்குகளுக்கு போட்டியாக 800எம்டி நம் நாட்டு சந்தைக்கும் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles
English summary
KTM 790 ADV derived CFMoto 800MT breaks cover Things to note.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X