ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சிஎஃப் மோட்டோ ஒரே நாளில் மூன்று புதிய விலையயுர்ந்த இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சிஎஃப் மோட்டோ இந்தியாவில் மிக சைலண்டாக மூன்று புதிய பிரீமியம் தர பைக்குளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 650 என்கே, 650 ஜிடி மற்றும் 650 எம்டி ஆகிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

இவையனைத்தும் பிஎஸ்6 தர எஞ்ஜினுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ரூ. 4.29 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இவை விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றன. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விற்பனைக்கு அறிமுகமானதை அடுத்து ஆன்லைன் தளத்தின் வாயிலாக பைக்குகளுக்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

முழு விலை விபரம்:

  • 650 என்கே: ரூ. 4.29 லட்சம்
  • 650 எம்டி: ரூ. 5.29 லட்சம்
  • 650 ஜிடி: ரூ. 5.59 லட்சம்
  • பழைய விலை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தால், புதியவையின் விலை சற்று அதிகமாக விற்பனைக்கு வந்திருக்கின்றன. 650 எம்டி ரூ. 30 ஆயிரம் அதிகம் விலையிலும், 650 ஜிடி ரூ. 10 ஆயிரம் அதிக விலையிலும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

    ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

    நிற தேர்வுகள்:

    650 என்கே பியர்ல் வெள்ளை, ஏதென்ஸ் நீல நிறம் ஆகிய நிற தேர்வுகளிலும், 650 எம்டி ராயல் நீலம் மற்றும் பியர் வெள்ளை ஆகிய நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதேபோன்று, 650 ஜிடி பைக்கானது கான்செப்ட் கருப்பு மற்றும் நெபுலா நீலம் ஆகிய இரு நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

    ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

    எஞ்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:

    தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் அனைத்து மோட்டார்சைக்கிள்களிலுமே ஒரே திறன் கொண்ட எஞ்ஜின்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 650 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு பாரல்லல் ட்வின் எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 55.6 பிஎச்பி பவரை 8,250 ஆர்பிஎம்மிலும், 54.4 என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

    ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

    இது சற்று குறைவான திறனே ஆகும். ஆம், பிஎஸ்4 தர எஞ்ஜின் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் 13.4 பிஎச்பி மற்றும் 8 என்எம் டார்க் வரை குறைவாக பிஎஸ்6 வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்ஜின் மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் புதிய பிஎஸ்6 மாடல்களில் செய்யப்படவில்லை.

    ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

    ஆகையால், உருவம் மற்றும் சிறப்பம் ஆகியவற்றில் புதிய 2021 சிஎஃப் மோட்டோ 650 பைக்குகள் பழைய உருவ தோற்றத்திலேயே காட்சியளிக்கின்றது. சிஎஃப் மோட்டோ 650 என்கே பைக் கவாஸாகி இசட்650 மற்றும் பெனெல்லி லியன்சினோ 500 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

    ஒரே நாளில் 3 பிஎஸ்6 தர பைக்குகளை விற்பனைக்கு களமிறக்கிய சிஎஃப் மோட்டோ! யம்மாடியோ ஒவ்வொரு பைக்கும் இவ்ளோ விலையா?

    ரூ. 5 ஆயிரம் என்ற முன் தொகையில் பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கியிருக்கின்றது. ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக முன் பதிவு நடைபெற்று வருகின்றது. இரட்டை ட்யூவல் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த பிரீமியம் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
CFMoto Launched 650NK, 650GT, 650MT BS6 Bikes In India. Read In Tamil.
Story first published: Thursday, July 1, 2021, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X