ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்

இரண்டு பேர் மட்டுமே செல்லக் கூடிய இருசக்கர வாகனத்தை நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனமாக இளைஞர் ஒருவர் மாற்றியமைத்திருக்கின்றார். இந்த சுவாரஷ்ய நிகழ்வு பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் ஒருவர் (மூன்றாவது நபர்) செல்வது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும். ஆனால், இங்கு ஓர் மனிதர் மூன்று அல்ல நான்கு பேர் வரையில் செல்லும் வகையில் தனது இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றி அமைத்திருக்கின்றார். இந்நிகழ்வு பற்றிய பல சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரே, இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இரு சக்கர வாகனத்தை நான்கு பேர் பயணிக்கக் கூடிய மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கின்றார். பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை அவர் இவ்வாறு மாடிஃபை செய்திருக்கின்றார். கூடுதலாக இரு பயணிகள் அமர்வதற்கான இருக்கை அமைப்பையும் ஸ்கிராப் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் இருந்தே அவர் பெற்றிருக்கின்றார்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

இரண்டையும் இணைத்ததன் வாயிலாக தற்போது நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிக்கக் கூடிய வாகனமாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. இரண்டாவதாக பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பஜாஜ் சேத்தக்கின் முகப்பு பகுதி முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது. கால் வைக்கும் பகுதி வரை விடப்பட்டு மற்ற முன் பக்க அம்சங்கள் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

இதையடுத்தே இயக்க நிலையில் இருக்கும் மற்றுமொரு சேத்தக் ஸ்கூட்டரின் பின் பகுதியுடன் அது இணைக்கப்பட்டு நான்கு பேர் செல்லும் வாகனமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் சிலர் தங்களின் இதுபோன்ற தனித்துவமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கும் அதுல் தாஸ், சொந்தமாக ஏடி ஆட்டோமொபைல்ஸ் (AD Automobile) நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் சில வாரங்களுக்கு முன்னரே இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியமைத்ததாக தெரிவித்திருக்கின்றார்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

தற்போதைய எரிபொருள்களின் அதிகபட்ச விலை மற்றும் பெரிய குடும்பத்தினர்களின் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஸ்கூட்டரை வடிவமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தின் உருமாற்றத்திற்காக அவர் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த மிகக் குறைவான தொகையிலேயே நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

தற்போது இந்த இருசக்கர வாகனத்திலேயே தனது மனைவி, பிள்ளைகளுடன் அவர் வலம் வந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தனது நண்பர்களுடனும் பயணிக்க இவ்வாகனத்தை பயன்படுத்தி வருவதாக தாஸ் கூறியிருக்கின்றார். ஆனால், இது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும்.

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்!

இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன் அங்கீகாரம் இல்லை என்பதால் போக்குவரத்துத்துறை எப்போது வேண்டுமானாலும் தாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகின்றது. வாகனங்களின் உருவத்தையோ அல்லது அடையாளத்தையோ மாற்றுவதற்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லை. அதே நேரத்தில் உரிய அனுமதியைப் பெற்று வாகனங்களை மாற்றிக் கொள்ளலாம்.

சில பெரும் நிறுவனங்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், ஆய்விற்காக தயாரிக்கப்படும் வாகனங்கள் பொதுசாலையில் பயன்படுத்தாத வரையிலும் அந்த வாகனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்காது என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.

கடந்த காலங்களில் இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் பலவற்றின்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தியதாக தெரியவில்லை. அதேநேரத்தில், வாகன மாடிஃபிகேஷன்கள் முரண்பாடானதாக தெரிந்தாலும் அவற்றை ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறுமளவிற்கு சில வாகனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, அதிக லக்சூரி வசதி மற்றும் கவர்ச்சியான தோற்றத்துடன் பல வாகனங்கள் நம் நாட்டு வாகன ஆர்வலர்களின் கை வண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில்கூட பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் காட்ஸில்லாவை போல் ராயல் என்பீல்டு பைக் ஒன்று மாற்றியமைக்கப்பட்டது. அதுகுறித்த சுவாரஷ்ய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

குறிப்பு: முதல் இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Chetak scooter converted into four seater vehicle
Story first published: Saturday, November 27, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X